இலங்கை அரச ஹஜ் குழு, தனது கடமைகளை இடை நிறுத்தியது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி தீர்மானங்களையடுத்து முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென புதிதாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதால் புதிய இராஜாங்க அமைச்சரின் உத்தரவுகள் கிடைக்கும் வரை இதுவரை காலம் இயங்கி வந்த அரச ஹஜ்குழு தனது கடமைகளை இடை நிறுத்தி வைத்துள்ளதாக குழுவின் தலைவர் கலாநிதி. எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
புதியமாற்றங்களினையடுத்து அரச ஹஜ்குழு தொடர்ந்தும் செயற்படுமா இல்லையேல் புதிய குழுவொன்று நியமிக்கப்படுமா என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘தற்போது நிலவும் அரசியல் தலம்பல் நிலைமைக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்பே தீர்வுகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’. இந் நிலையில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்காக புதிதாக நியமனம் பெற்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடமிருந்தும் இதுவரை எதுவித உத்தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை. ஹஜ் ஏற்பாடுக்கென ஹஜ் சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்தில் அங்கீகரித்துக் கொள்வதற்காக சட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு வந்தது. அதன் பணிகளும் தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli
Fauzi is waiting from MY3 % MR....as they r looking to increase the rates and to make double allcountry fees to go to Gulf
ReplyDelete