முஸ்லிம் கட்சிகளின், தயவில் பாராளுமன்றம்
பிரதான கட்சிகள் இரண்டும் பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுட்டுக்கொண்டிருக்கின்றன. இவையிரண்டும் இப்போது சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாடியிருக்கின்ற அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் கட்சிகளும் தாம் எத்தரப்பை ஆதரிக்கப்போகிறோம் என்ற நிலைப்பாட்டுக்கு இது வரையும் வரவில்லை என்றே தெரியவருகிறது.
16 பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமாக மஹிந்த பிரதமராக்கப்பட்டுள்ளமையால் தாம் மஹிந்தவை ஆதரிக்கப் போவதில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதில் 6 உறுப்பினர்களையும் தம் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற ஓர் உறுப்பினருடன் மொத்தம் 7 உறுப்பினர்களைத் தம்வசம் வைத்துள்ளது.
இதேபோன்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே. முன்னணியில் இணைந்து போட்டியிட்டதன் மூலம் 5 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
இவ்விரு கட்சிகளிலும் உள்ள 12 பிரதிநிதிகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவருடனும் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளன.
ஐ.ம.சு முன்னணி சார்பாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையிலான முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் தம்பக்கம் ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதா என்ற இக்கட்டில் இரு கட்சிகளும் உள்ளன. மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும் இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்கும் பட்சத்தில் இரு கட்சிகளுக்கும் தலா கபினட் அமைச்சுக்கள் இரண்டும் பிரதி அமைச்சுக்கள் பலவற்றையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது விடயமாக சிங்கள ஊடகமொன்று ஸ்ரீல.மு காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பருடன் வினவியபோது தமது கட்சி இதுவரை எந்தத் தீர்மானத்திற்கும் வரவில்லை என்றே அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மஹிந்தவை ஆதரிக்கப் போகிறீர்களா? என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்ட போதும் தாம் அத்தகைய முடிவெதுவும் எடுக்கவில்லை என்றே அவர் உறுதியளித்துள்ளார்.
இதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதியொருவர் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்தராஜபக் ஷவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளபோதும், அதுவும் முழுக்கட்சியையும் தவிர்த்து தனி நபர் என்ற அடிப்படையில் அவரது ஆதரவும் ஏற்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
கடந்த பொதுத்தேர்தலில் ஐ.தே. முன்னணிக்கு106 ஆசனங்களும் ஐ.ம.சு. முன்னணிக்கு ஈ.பி.டீ.பி. ஓர் உறுப்பினருடன் 96 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஐ.தே. முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருந்த விஜயதாஸ ராஜபக் ஷ, வஸந்த சேனாநாயக்க, ஆனந்த அளுத்கமகே, துனேஷ் கங்கந்த, வடிவேல் சுரேஷ், எஸ்.பீ. நாவின்ன, எஸ். வியாழேந்திரன் ஆகிய 7 உறுப்பினர்களும் அமைச்சுச் சலுகைகளைப்பெற்று மஹிந்த பக்கம் தாவியுள்ளனர். இந்நிலையில் தற்போதைய ஆளுந்தரப்பு 103 உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது . மேலும் ஐக்கிய தேசிய கட்சியால் நியமனம் பெற்ற அதுரலியே ரத்ன தேரரும் மஹிந்த கூட்டணியை ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் மஹிந்தவுக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 9 பேரே தேவைப்படுகின்றனர். ஜனாதிபதியின் ஜனநாயகத்துக்கு எதிரான முடிவு என்ற காரணியை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் 6 பிரதிநிதிகளும் தமிழர் கூட்டணியின் 15 தற்போதுள்ள பிரதிநிதிகளும் மஹிந்தவை ஆதரிக்காத நிலையில் இரு முஸ்லிம் கட்சிகளின் தயவையே மஹிந்த தரப்பு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று எழுந்துள்ள சிக்கல் நிலையில் ஜனநாயக குளறுபடிக்கு பதிலடி கொடுக்க தமிழர் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பயணிக்கும் பாதையில் முஸ்லிம் கட்சிகளும் பின்பற்றவே செய்யும் என்றும் பெரும்பாலான நடுநிலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே பட்டம், பதவி, சலுகைகளை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாமிய விழுமியத்தையும் ஜனநாயகப் பாராளுமன்றத்தையும் பாதுகாக்க முஸ்லிம் கட்சிகள் கைகோர்க்கும் என்பதை அடுத்து வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
-Vidivelli
ரவூப் ஹகீம்,ரிசாத் அவர்களே நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவைகள் மூலம் எந்த உதவயும் செய்யத்தேவையில்லை ஜன்னாயகத்தை புதைத்துவிட்டு நாட்டின் சட்டத்தை புரம்தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்கும் முறையில் பகிரங்கமாக இலஞ்சம் கொடுத்து பிரதமராக முயற்சிக்கும் மஹிந்தவிற்கு இந்த நிலைமையில் உதவ வேண்டாம் இப்படி ஒரு தீங்கை நீங்கள் செய்தால் நாட்டுக்கு தீங்கு செய்த (தம்பிலா) என்று பெரபான்மை மக்கள் உங்களையும் இலங்கை முஸ்லிம்கறையும் மருமை வரை திட்டி தீர்து வரலாறு எழுதுவார்கள்
ReplyDeleteMahinda bettet then rani
ReplyDeleteரனில்,மைதிரி,
ReplyDelete,மஹிந்த,எல்லாறும் ஒன்றுதான் யாரும் நாட்டுமக்களின் பிரச்சினைகளை கவனம் எடுப்பதில்லை ஆகையால் அனைவரும் மக்களின் சொத்துக்களை களவெடுப்பதில் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றார்கள் ஆகையால் எவனாக இருந்தாலும் சட்டத்திட்கு மாறுசெய்பவனை ஆதரிக்காதிர் அதொயாவது உங்களால் தைரியமாக செய்யமுடியும் என்று நம்புகின்றோம்,பாராலுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினாலும் முஸ்லிம்களின் பங்களிப்பை பெரும்பான்மை கட்சிகள் கேட்பார்கள் அப்போது மக்களின் தேவைகளை முன்வைத்து பேரம் பேசவும்
Riyal you areselfish talking
ReplyDelete