Header Ads



முஸ்லிம் விவகார, அமைச்சும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு - வர்த்மாணியும் வெளியிடப்பட்டது

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களுக்கு மேலதிகமாக முஸ்லிம் அலுவல்கள் அமைச்சும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய விசேட வர்த்தமாணி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புக்கள் சம்பந்தமான விசேட வர்த்மாணி அறிவித்தல் கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதற்கமைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அமைச்சுப் பொறுப்புக்களின் கீழ் முஸ்லிம் சமய, கலாச்சார  அலுவல்கள் திணைக்களம், தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை   ஆகிய முக்கிய திணைக்களங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்கமை நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து பணியாற்றவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. பவுஸியும் பாய இருந்தார் என்பது உறுதியாகியது

    ReplyDelete
  2. வேறு யார் இருக்காங்க.

    ReplyDelete
  3. எந்த பதவியை கொடுத்தாலும் அதனை மிகவும் வினைத்திறனுடன் மேட்கொள்ளும் ஆற்றலை அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான் .

    ReplyDelete
  4. பட்டம் என்ன விலை

    ReplyDelete

Powered by Blogger.