Header Ads



சபாநாயகருக்கு எச்சரிக்கை, விடுத்துள்ளோம் என்கிறார் ஹக்கீம்

சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட  பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டாமல் காலம் தாமதிப்பதன் மூலம் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமராகத் தான் நியமிக்கப்பட்ட பிரதமர் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை அனைத்தக் கட்சித் தலைவர்களும் இணைந்து சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கூரலில் பாராளுமன்றத்தை காலந்தாழ்த்தாது உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து வருமாறு,

நடைபெற்ற இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் கண்டிக்கின்றோம். பாராளுமன்றத்தில் பிரதமருடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இருக்கின்ற வாய்ப்பை இல்லாமல் செய்கின்ற அடிப்படையிலேயே பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்காக அதிகாரத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தி வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி செய்துள்ள செயல் மிக மோசமான ஜனநாயக மீறல் என்று நாங்கள் கண்டிக்கின்றோம்.

எனவே எமது உரிமைகளை பாதுகாக்கின்ற  எமது சபையின் தலைவர் என்ற அடிப்படையிலே இந்த நாட்டின் சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்திலே பாரிய தார்மீகப் பொறுப்பு மாத்திரமல்ல, நீதியின் கடமையும் உள்ளதென்பதை நாங்கள் அவருக்கு வலியுறுத்தியுள்ளோம். 

அதனைச் செய்வதன் மூலம் இன்று நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற இந்த அராஜக நிலைமையை மிக விரைவிலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் சட்டத்தின் நிலைநாட்டுவதற்குரிய ஏற்பாட்டுக்கு அவர் வழிகோல வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை, சபாநாயகர் எமது வலியுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான ஒப்புதலை தந்திருந்தாலும் கூட, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லையென்று தான் அறிகின்றோம்.

இந்த நிலையில் தான் அதனை மிகவிரைவில் செய்வதற்குத் தவறினால் நாங்களா பாராளுமன்றத்தின் சபாபீடத்திற்குள் நுழைவதற்கும் தவறமாட்டோம் என்று நாங்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்என அவர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. DECEPTIVE AND MUSLIM LEADERS WILL HAVE NO SAY AFTER THE 7th., NOVEMBER, 2018, Insha Allah. The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. It is time that the Muslim parties and politicians concentrate more on issues of democracy than keep grumbling on petty issues.

    ReplyDelete
  3. Mahinda is not a legal entity to the premier post.After the discussion with the President who agreed to convene Parliament on 07th November 2018, Speaker has agreed to allocate Premier seat to Mahinda. Now, Parliament will be reconvened on 16th Nov. as scheduled earlier. Speaker should not allocate Premier seat to Mahinda.He must show his majority in Parliament.This long due is to purchase MPs. President is partial.Tit for Tat.

    ReplyDelete
  4. ஹக்கீம் அவர்கள் ரணில் ஆட்சியில் எவ்வளவு அநியாயம் நடந்தாலும் அதனை மூடி மறைக்க பல்வேறு முயட்சிகளையும் மேட்கொண்டு ரணிலை பாதுகாப்பார் .ரணிலுக்கு எதிரான ஆட்சி அமையும்போது நீதி நியாயம் சம்பந்தமாக சர்வதேசம் வரை கொண்டு செல்வார் .

    ReplyDelete

Powered by Blogger.