Header Ads



சுயாதீனத்தை இழக்கும், தேர்தல் ஆணைக்குழு - சிறிசேனவின் கை பொம்மையாகுமா..?

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய  சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின்  அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம்  கையளித்துள்ளார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது  உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

மகிந்த தேசப்பிரிய நளின் அபயசேகரவை ஆணைகுழுவிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார், பேராசியா இரட்ண ஜீவன் கூல் குறிப்பிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக பதவி விலக தீர்மானித்துள்ளார் என  கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பதவிவிலகல் காரணமாக தேர்தல் ஆணையகம் செயழிலந்து போகும் என தெரிவித்துள்ள  கொழும்பு டெலிகிராவ் இதன் காரணமாக இலங்கையின் தேர்தல் நடைமுறைகள் ஆணையாளர் நாயகமே அனைத்தையும் தீர்மானிக்கு பழைய முறைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை செயலிழக்கச்செய்து விட்டு பழைய முறைக்கு திரும்புவதற்கான சதி முயற்சி இடம்பெறுகின்றதா என கொழும்பு டெலிகிராவ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன 19 வது திருத்தத்தை அப்பட்டமாக மீறி பாராளுமன்றத்தை கலைத்துள்ள பின்னணியில் இது இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள கொழும்பு டெலிகிராவ் சுதந்திரமான நீதியான தேர்தல்களிற்கான மக்களின் ஒரேயொரு நம்பிக்கையாக  சுயாதீன தேர்தல்  ஆணையகம் மாத்திரமே காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளது.

பழைய முறைக்கு திரும்புவதற்கான மகிந்த தேசப்பிரியவின் முயற்சிகள் அவர் சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலிற்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்குகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

அவரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை தவிர்க்க மகிந்த தேசப்பிரிய முயல்கின்றாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இந்த கட்டத்தில் இராஜதந்திரம் அவசியம், தேசப்பிரிய சரியான நேரத்தில் அவரின் திறமையை வெளிப்படுத்துவார்.

    ReplyDelete

Powered by Blogger.