Header Ads



பாராளுமன்றத்தில் வெற்றியீட்டப்போவது யார்..? (முழு விபரம் இணைப்பு)


நாட்டிலுள்ள தற்போதைய கள நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு 104 பேரின் ஆதரவும், 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசிய முன்னணிக்கு 99 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் பொது நிலையில் உள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 8 பேர் இணைந்து கொண்டனர். அதில் 6 பேர் ஐ.தே.கட்சியினர். அத்துடன், ஈ.பி.டீ.பி. உறுப்பினர் ஒருவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் இவர்களில் உள்ளனர். இவர்களுடன் புதிய அரசாங்கத்துக்கு தற்பொழுதுள்ள மொத்த ஆதரவு தொகை 104 ஆகும்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க நேற்று ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்படி பாராளுமன்றத்தில் ரணிலுக்கே, பெரும்பான்மை காணப்படுகிறது.

DC

8 comments:

  1. ரணில் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு என்ன பிரியோசனம்?
    பெரும்பாண்மை பலம் பாராளுமன்றத்தில் இருக்கும் போதே அரசியல் தீர்வுகள் ஒன்றும் நிறைவேற்ற முடியவில்லை. இப்போ வெற்றிபெற்று இந்த தொங்கு பாராளுமன்றில் என்னத்தை பிடுங்கப்போகின்றார்?, சர்வதேச வற்புறுத்தலுக்கு அமைய ஏதாவது தீர்வுகள் வந்தாலும், அதை அமுள்படுத்த ரணிலுக்கு முதுகெலும்பும் இல்லை. முஸ்லிம்களும் முட்டையில் மயிர்பிடுங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    மகிந்த வெற்றிபெற்றால், at least, கூத்தாவது பார்க்கலாம். எமது புலம்பேர் அமைப்புக்கள் மீண்டும் சுறுசுறுப்படைவார்கள். USA-UK-EU ஜெனிவா file-களை தூசு தட்டி எடுப்பார்கள்.

    எனவே TNA நடுநிலை வகுத்தால் எப்படி?

    ReplyDelete
  2. Antony nee eppa parthume thuvesathudan than comment panra. Konjam Adakki vasi rasa

    ReplyDelete
  3. அண்டோனிராஜ், தேவையில்லாமல் முஸ்லிம்களை வம்பிற்கு இழுக்க வேண்டாம். முஸ்லிம்கள் மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதே சரி.

    ReplyDelete
  4. நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளேன். Ajan Antonyraj ஒரு முஸ்லிம். அவர் முஸ்லிம்களுக்குச் சூடேற்றுவதற்காகவே இவ்வாறெல்லாம் எழுதுகிறார். ஐயா, மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. @Noodeen, நான் சொன்னது 100% உண்மை. காலம் காலமாக முஸ்லிம்கள் இதைத்தானே செய்கிறார்கள்.
    முஸ்லிம்களுக்கு ஏதாவது அரசியல் அபிலாசைகள் இருந்தால், அதை அரசாங்கத்துக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், அதை பெற போராடவேண்டும் அல்லது முயற்சிகள் செய்யவேண்டும்.

    ஆனால், ஒன்றும் செய்யாமல் கடைசிவரை இருந்து விட்டு, பின்னர் தமிழர்கள் ஏதாவது தீர்வுகள் அரசுடன் முடிவு செய்யும் போது மட்டும் வந்து, அரசிடம் பணம் வாங்கிவிட்டு, அதை குழம்பும் முயற்சியில் ஈடுபடுவார்கள்,

    ReplyDelete
  6. Ajan முஸ்லிம்கள் முட்டையாக இருந்தாலும் கூட தேவைப்பட்டால் மயிரை பிடுங்கி காட்டுவார்கள் திறமையுள்ளவர்கள்.

    தமிழர்களைப்போல் தனிஈழம் கேட்டு போராடி புஸ்வானமாகி இரண்டும் கெட்டு செத்து மடிய மாட்டார்கள்

    ReplyDelete
  7. Ajan, முஸ்லிம் வாக்குகளில் தெரிவான முஸ்லிம் தலைவர்களுக்கு அவர்களும், அவர்களின் மக்களும் விரும்புவதை செய்வதற்கு உரிமை இருக்கின்றது, அதில் குறை சொல்ல நாங்கள் (நாம்) யார்?

    சுத்துமாத்து போன்ற தமிழ் தலைமைகள் காலா காலம் நம்மை ஏமாற்றுவதிலேயே மட்டுமே தமது திறமைகளை பயன்படுத்தும் பொழுது முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாபம் மட்டுமே என்று இல்லாமல் சுயலாபத்துடன் சேர்த்து தங்களது சமூகத்தின் நலன், அபிவிருத்தி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நல்ல தீர்மானங்கள் எடுத்தால் அதன் மீது நீங்கள் (நாம்) காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது. நம்மைப் பற்றி, நமது மக்களின் உண்மையான தேவைகள், முன்னேற்றங்கள் பற்றி சிந்திக்காமல், வேறு உணர்ச்சி வார்த்தைகளால் நம்மை ஏமாளிகள் ஆக்கி முதுகில் சவாரி செய்யும் தலைமைகளை தெரிவு செய்து வைத்திருப்பது நமது மடத்தனமே, இதற்காக முஸ்லிம்களை குறை சொல்வது கேவலமான செயல்.

    ReplyDelete

Powered by Blogger.