அரசியல் நெருக்கடியால் பல மில்லியன், டொலர் நிதியுதவி முடக்கியுள்ளன - ரணில் கவலை
அரசியல் நெருக்கடியால் பல மில்லியன் டொலர் நிதியுதவியை ஜப்பானும் அமெரிக்காவும் முடக்கியுள்ளன - ரணில்
இலங்கையில் அரசியல் குழப்பநிலை உருவான பின்னர் அமெரிக்காவும் ஜப்பானும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதன் காரணமாக இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதால் ஜப்பானும் அமெரிக்காவும் பல மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் குறி;த்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து உலகநாடுகள் மிகவும் உணர்வுபூர்வமான நிலைப்பாட்டை கொண்டுள்ளன, நாடுகள் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் காணி நிர்வாகத்தில் முன்னேற்றம் காணும் நடவடிக்கைகளிற்காக 500 மில்லியன் டொலர்களை வழங்கயிருந்த அமெரிக்கா அதனை தற்போது இடைநிறுத்தியுள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புகையிரத அபிவிருத்தி திட்டமொன்றிற்காக 1.4 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்த ஜப்பான் அதனை வழங்குவதை தற்போது இடைநிறுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி எனது பெரும்பான்மையை நிருபிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டங்களை எனது கட்சி விஸ்தரிக்கவுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் மாற்றுவழிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்,பொதுமக்களை பெருமளவில் அணி திரட்டவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
So what
ReplyDeleteNot So what.
ReplyDeleteHe is the made master plan to destroy your tigers ltte.and mahinda regiment.in the past.
"Thannaala Thaan Keta - Annavi Enna Seywaan" is the Tamil proverb that fits to crown Ranil Wickremasinghe in this moment.
ReplyDeleteHe was NOT a politician who loved the people - "selfish guy".
If so, it is the people/citizens who will have to suffer, may God AllMighty Allah forbid that, Insha Allah.
Noor Nizam.
Convener - The Muslim Voice".
His percentage will be not receive that is what his worry!!!!
ReplyDeleteமகிந்த ஆட்சியில் முஸ்லிம்கள் இழந்த சொத்துக்களை விட உங்கள் ஆட்சியில் தான் முஸ்லிம்கள் இழந்தார்கள். நீங்கள் ஒரு நரி என்பதை நாம் அறிவோம்.
ReplyDeleteதற்போது மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம்.
His percentage will be not received that is what his worry!!!!
ReplyDeleteஉங்கள் நண்பன் மகேந்திரன் கொள்ளை அடிக்க நீங்கள் அனுமதித்ததை விடவுமா?
ReplyDeleteஆமல்ல, மத்திய வங்கியில் கொலை அடிச்ச இவரோட நண்பரையும், பணத்தையும் நாட்டை விட்டு தப்பிப் போக உதவி செய்த பொழுது நாட்டுக்கு நல்ல லாபம் போல... நாட்டில் இருந்த அந்த கள்ளனை திரும்பி வருவார் என்று சொல்லி சிங்கப்பூர் அனுப்பி வைத்ததே இவர்தானே. பொத்திட்டு போங்க ராசா.
ReplyDeleteஅடடா, மத்திய வங்கிக் கொள்ளை மறந்து போச்சா?
ReplyDelete