Header Ads



தொலைபேசி அழைப்பை எடுத்த மகிந்த, எப்போது இந்த பக்கம் வருகிறீர்கள் எனக்கேட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கை அனைத்து மதங்களுக்கும் விரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான மக்களே தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்தனர். இதனை அவரும் அறிவார் நாடும் அறிவோம். உலகமும் அறியும்.

ஜனாதிபதி மனமே நாடகத்தில் போன்று வாளை வேடனுக்கும் வில்லை எமது பிரதமருக்கும் கொடுத்துள்ளார். இது தவறான நடவடிக்கை என முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே நியமிக்கப்பட்டுள்ள போலி பிரதமரை நாட்டில் உள்ள எந்த வெளிநாட்டு தூதரகங்களும் வாழ்த்தவில்லை.

சீன அரசாங்கத்தின் தூதுவர் வந்து வாழ்த்தியதாக அவர்கள் செய்தி வெளியிட்டனர். சீன தூதரகத்தினர் சட்டரீதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்தனர். திருட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தனர்.

முடிந்தால், சீன தூதரகம் வாழ்த்திய கடிததத்தை காட்டுமாறு நான் கேட்கிறேன். ஒரு நாடு வாழ்த்தியிருந்த போதிலும் உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் இதுவரை மகிந்த ராஜபக்சவை ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இது பற்றி பேசப்பட்டுள்ளது. இந்த போலி நியமனத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ள திருட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போது இந்த பக்கம் வருகிறீர்கள் எனக் கேட்டார்.

அந்த ஒலிப்பதிவை நானும் கேட்டேன். எஸ்.பி.திஸாநாயக்கவும் ரங்கே பண்டாரவை அழைத்தார். பணம் கொடுத்து எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கேவலமான நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.