Header Ads



நாடு எக்கேடு கெட்டாலும், நானாமாருக்கு என்ன..? மக்காவிலிருந்து உடனடியாக நாடு திரும்புங்கள்


தேசம் அரசியல் நெருக்கடியில் இருக்கும் பொழுது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இன மத அடையாளங்களுக்கு அப்பால் தேசத்தில் மக்களோடு இருப்பதுவே உயரிய இபாதத் ஆகும்!

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவரான வியாக்கியானங்களுக்கு இடமளித்து உம்ரா என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக வெளிநாடு சென்றிருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் விலை போவதை தடுக்கும் ஒரு யுக்தியாக சந்தோஷ உம்ராக்களில் நாடுகடத்தி கொளரவ பணயம் வைத்திருப்பதாக மக்கள் உங்கள் இதய சுத்தியுடன் கூடிய உம்ராக்களை தவறாக புரிந்து கொள்ள இடமிருக்கிறது.

அல்லது நாடு எக்கேடு கெட்டாலும் நானாமாருக்கு என்ன..? என்று பெரும்பான்மை சமூகம் தப்பெண்ணம் கொள்ளவும் இடமிருக்கிறது.

நெருக்கடி நிலையில் அல்லாஹ்விடம் அஞ்சியும் கெஞ்சியும் நாட்டுக்காக பிரார்தனைகள் செய்யத் தான் நீங்கள் மக்கா மதீனா சென்றீர்கள் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை அல்லவா..!

அரசியல் நெருக்கடியின் உச்ச கட்டங்களில் வேறுவழியின்றி இனமுருகல்களை ஆயுதமாக பயன்படுத்திய கடந்த கால வரலாறுகளை மறந்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக சவூதி சென்றமையை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவசர அவசரமாக உம்ரா கிரியைகளை நிறைவுசெய்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் துஆ பிரார்தனைகள் செய்து விட்டு அங்கிருந்து கொழும்பிற்கு முதலாவது வந்து சேரும் ஏதாவது ஒரு விமான சேவையில் நாடு திரும்பமாறு உங்களை அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது உம்ராக்களை அங்கீகரித்து சரியான திசையில் நகர்த்துவானாக!

Inamullah Masihudeen




10 comments:

  1. இரு கட்சிகளும் சரியான முடிவுதான் எடுத்துள்ளார்கள் நீங்க ஏன் இந்த வரத்து வாரீங்க.

    ReplyDelete
  2. It may be that they make repentance for their political mistakes ..
    So let them do it and come back ..
    So do they understand what you say

    ReplyDelete
  3. நான் சும்மா ஒன்னு கேட்கிறேன். இந்த 12 முஸ்லிம் MP மாரும் இப்ப வெளிநாட்டுக்குப் போயிருக்காங்க. வெளிநாட்டுக்கு இந்த Critical time ல போறதுக்கு என்ன அவசியம், அவசரம் இருக்கு. இவங்க யார்க்கிட்ட Permission எடுத்து போயிருக்காங்க. இந்தக் காலத்தில முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியா பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அதுக்கு யார் தலை கொடுப்பாங்க. அரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ அல்லது வேறு ஒரு தொழில் செய்பவரோ வெளியில் போரதென்டால் substitute ஒருவரை வச்சுப் போட்டுத்தான் போவாங்க. இது என்ன ridiculous!

    ReplyDelete
  4. இவர்கள் தேர்தல் கால போராளிகள்

    ReplyDelete
  5. சாணக்கியம தெரியாத இவர்கள் உம்றாவுக்கு சென்று யாருக்கு என்ன பயன் ? அம்பாறை மாவட்டத்தில் நிறைவேற்றவேண்டிய பலவிடயங்கள் சந்தர்ப்பம் அமைந்ததும் கைநழுவிட்டதை நினைக்கையில் கவலையளிக்கிறது.

    ReplyDelete
  6. This news is not acceptable at all. The 2 main political leader in the Island and the rest of the members who were all separated are all together now and are under one team and we must be happy about this and now they are in place which is very important for muslims and are discussing about it and they will do their duties and return back to Sri lanka their is going to be no harm with them being in Sri Lanka nor not in Sri lanka.

    ReplyDelete
  7. First of all didn't like the negative heading to present what ever you say.
    I believe most of us agree rather be two parties be one and strong will be much more beneficial to our community. If not at least work together in unity 2 parties.
    These members already had discussion with the Muslim groups they would have made a decision if it's that.. it will good for all of us.
    Hope that happens.
    Who they wanted to ask before they wanted to go ummrah.
    May Allah helps them and us betterment for the country and community.

    ReplyDelete
  8. Who says need to get persmission to go Umrah, it's their wish and i believe they have taken right decision at right time. No need to worry about others whatever they say. Moreover if any problem against us, it's Allah will protect us. We need to be prepared but no need to depend 100% by them, which mean stopping them from Umrah to save us, what is this??? whatever purpose they went, it's upto them, it's not our duty to judge it.

    ReplyDelete
  9. இவனுகள் சோத்து மாடுகள்.. 2018 கட்சிதமாக 3 கலவரங்களை நடாத்திக் காட்டினார் ரணில்.. மஹிந்த காலத்தில் நடந்த ஒரு கலவரம் தான் இவர்களுக்கு மகிந்த ஆட்சியை வெறுப்படைய வைத்ததென்றால்... இப்போ?? ஒன்றுக்கு மூன்று கலவரங்கள் நடந்தாச்சு.. என்னதான் செரச்சீங்க...??

    ReplyDelete

Powered by Blogger.