Header Ads



பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மகிந்தவே பிரதமராக இருப்பார்

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் மகிந்த ராஜபக்சவே பிரதமராக இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகிந்தவை பதவியிருந்து நீக்க வேண்டுமாக இருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று -01- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டிருந்தால் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பார். எனினும், ரணில் இதுவரையில் அவ்வாறு செய்யவில்லை.

இதன் மூலம் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்ததை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்றத்துக்கு மாத்திரமே அரசியலமைப்புக்கு வியாக்கியானம் தெரிவிக்கமுடியும்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் மகிந்த ராஜபக்சவே பிரதமராக இருப்பார்.

மகிந்தவை பதவியிருந்து நீக்க வேண்டுமாக இருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து தோற்கடிக்க வேண்டும்

அவ்வாறு தோற்கடிக்கப்பட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகலாமென தெரிவிக்கமுடியாது” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.