யூதர்களுக்கு பணம் வசூல்செய்து கொடுத்த முஸ்லிம்கள்.
சென்ற 27-10-2018 அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு மூர்க்கன் கண் மூடித்தனமாக சுட்டதில் 11 யூதர்கள் இறந்தனர். சுட்டவன் பெயர் ராபர்ட் பவர்ஸ் - வயது 46. (நல்லவேளையாக சுட்டவன் முஸ்லிம் அல்ல: இல்லை என்றால் கண் காது மூக்கு வைத்து நமது ஊடகங்கள் பல கதைகளை இயற்றியிருக்கும்) :-)
சுட்டவனிடம் 'ஏன் சுட்டாய்?' என்று கேட்டதற்கு 'யூதர்கள் சாத்தானின் குழந்தைகள்: எனவே சுட்டேன்' என்கிறான். தற்போது சிறையில் உள்ளான்.
நிர்கதியாக நின்ற யூத குடும்பங்களை அரவணைக்க இஸ்லாமியர்கள் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஆச்சரியமாக குறுகிய காலத்திலேயே 2 லட்சம் டாலர் சேர்ந்து விட்டது. நன்றியோடு பெற்றுக் கொண்டனர் யூதர்கள்.
பென்சில்வேனியாவில் உள்ள இஸ்லாமிக் சென்டர் மட்டும் 70000 டாலர் வசூல் செய்து யூத குடும்பங்களுக்கு உதவியுள்ளது.
அங்கே பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களை தினமும் கொன்று குவிக்கின்றனர் யூதர்கள். ஆனால் இங்கோ வாழ்வாதாரத்தை இழந்து நின்ற யூதர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை வாரி வழங்குகின்றனர் முஸ்லிம்கள்.
இதுதான் இஸ்லாம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்-குர்ஆன் 5:8)
Well done
ReplyDelete