கட்சி தாவலுக்கு சன்மானமே வழங்குகிறோம், அது இலஞ்சம் அல்ல - வாசுதேவ
கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது என புதிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்சமாகவே கருதப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்ப்புபட்ட எவரையும் எம்முடன் இணைத்துக் கொள்ளப்போவதில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவும் இதுதொடர்பாக வாக்குமூலம் அளிக்கவேண்டிவரும்.
எமக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் நாங்கள் கோரியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பின் தலைவருடன் இதுதொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
அவர்களின் கோரிக்கைகளில் எங்களால் நிறைவேற்ற முடியுமான விடயங்களை செய்துகொடுக்க தயாராக இருக்கின்றோம். தற்போது கட்சி மாறும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
பணம்-பதவி இரண்டும் லஞ்சம் தான்.
ReplyDeleteத் தூ ...........
ReplyDeleteவங்கியில் கொடுப்பது வட்டியல்ல அது இலாபமே என்பது போல இருக்குது.
ReplyDeleteஉண்மையில் ரனில் கூறியதுபோன்று நீ ஒரு எதற்கும் பிரையோஜனமில்லாத காய்ந்த பூசனிக்காய்தான்.
ReplyDeleteஇவன் எப்பவோ தன்னுடைய தன்மையையும் தன்மானததையும் இழந்துவிட்டான். அதனால் இலஞ்சத்திற்கு அளிக்கும் இந்தப்புதிய விளக்கத்திற்கு மாமியார் வீடுதான (ஜெயில்) சரியான விளக்கத்தைக் கொடுக்கும.
ReplyDeleteஎனவே இப்போதைக்கு இவனை அங்கே அனுப்புங்கள் விளக்கம்பெற.
Unka appan veettu soththa
ReplyDeleteபோதை மருந்து அல்ல, உற்சாக மருந்து என்று சொல்வது போலுள்ளது.
ReplyDeleteSHAME ....
ReplyDeleteI think like rainy season this is a money transferring season. People are not idiots. You should know what is charity, gift and bribe. God's knows what's inside you and for what they used that money.
ReplyDelete