றிசாத்தும் ஹக்கீமும் கஃபா முன்பாக, கீழ்வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்
முன்னாள் அமைச்சர்களான ஹக்கீமும் ரிசாதும் ஒற்றுமையாக மக்காவில் இருக்கும் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் பின் வரும் விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடி கஃபா முன்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதற்கு சாட்சிகளாக இரு கட்சிகளையும் சேர்ந்த எம் பீக்கள் கையொப்பமிட வேண்டும்.
1. ரணிலுக்கோ மஹிந்தவுக்கோ ஆதரவளிப்பதாயின் பணம், பதவி பற்றி எத்தகைய பேச்சும் இன்றி முஸ்லிம்களின் பிரச்சினைகளை மட்டும் மையப்படுத்தி பகிரங்க ஒப்பந்தம் மூலம் ஆதரவளிக்க வேண்டும்.
2. இலங்கை திரும்பியதும் கல்முனையின் ஆட்சியை இரு கட்சியும் சேர்ந்து முன்னெடுக்கும் வகையில் மேயர் மு.காவும் பிரதி மேயர் அ.இ. ம. காவுமாக இருத்தல்.
3. கல்முனையை 1987ம் ஆண்டு இருந்தது போல் தர வேண்டும் என கூட்டாக அரசுக்கு மஹஜர் கொடுத்தல்.
4. சுனாமி வீட்டுத்திட்டத்தை உடனடியாக முஸ்லிம்களிடம் வழங்குவதற்காக இணைந்து கோரிக்கை விடல்.
5. இது போல் காணி, கொழும்பு முஸ்லிம்களின் வீட்டு பிரச்சினை போன்றவற்றில் ஒரே கருத்தை இணைந்து அரசுக்கு முன் வைத்தல்.
6. முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்ததுக்கும் இடமளிக்க கூடாது என கூட்டாக கோரிக்கை விடல்.
7. காரைதீவு, மஹியங்கனை போன்ற ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பட்டியலை அரசுக்கு ஒன்றாக வழங்கி அவற்றை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை முன் வைத்தல்.
8. அரசியல் நலனுக்காக சிங்கள, தமிழ் மக்களுக்கெதிராக பேசுவதோ, இதனை வைத்து முஸ்லிம்களை உசுப்பேத்துதலோ செய்வதில்லை என உறுதி எடுத்தல்.
9. வில்பத்து வர்த்தமாணிக்குள் புகுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்க கோரல்.
10. கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கேற்ப அரச காணிகளை பகிர்ந்தளித்தல்.
இது போல் நாம் ஏற்கனவே அவ்வப்போது சொல்லியுள்ள பிரச்சினைகளை உள்ளடக்கி இவற்றின் தீர்வுக்காக ஒருமித்து ஒரே குரலில் போராடுவது என ஒப்பந்தம் செய்வதே இந்த ஒற்றுமையின் வெற்றியாக இருக்கும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
Muslim Ulama party
Ivar enna avvalwu extrem???
ReplyDeleteIppathaan koncham sariaavi iikiraanga.
Moulavi ithai moutalil mahintavidam neengal kelungal
ReplyDeleteMajeed moulavi neenga paittu mahinda ranil ooda pesawum sirrrr
ReplyDeleteA VERY SENSIBLE PROPOSAL AND REQUEST, Insha Allah. "THE MUSLIM VOICE" supports these proposals/request, Insha Allah.
ReplyDeleteNoor Nizam - "The Muslim Voice".
கஃபாவுக்கு போனமா வணக்கவழிபாடுகளை நிறைவேற்றினோமா வந்தோமான்னு ஈக்கனும் அதவிட்டுட்டு இந்த சாக்கடை அரசியல் ஓப்பந்தம்னு திரியுரதும் அத கஃபாவுக்கு முன்னுக்கு நின்றுகொன்று சத்தியம் பண்னோனும்டு ஒரு ஆலிம் சொல்ரதும் உண்மையான இஸ்லாமிய சமூகத்திற்கு ஆபத்தானது
ReplyDeleteoknduthaan 2 sitelyyum intha tymla solluwaango bt ..waakka win pannitty awanga welayya paarppangayya...ithu arasiyal...
ReplyDeleteAll Rubbish.........
ReplyDeleteOnly one point- "Support the peoples mandate given to elect My3 in Jan 2015"
Inda Mubarak moulavi endru sollikollum keelsadi arasiyalwadi Mahinda rajapakse muttiyaa pudikkirade welaya pochchi.
ReplyDeleteநீங்க இந்தா சொல்ற 10 பெரும் குறைபாடுகளும் தேவைகளும் காலாகாலமா முஸ்லிம்களுக்கிட்ட இருந்து வரும் பெரும் பிரச்சினைகள்தான். இந்த பதினைந்து வருடங்களா இதைப்பற்றி யாரும் பாராளுமன்றிலோ அல்லது பொதுவெளியிலோ பேசி ஒரு Issue ஆ எடுக்கவும் இல்லை. இறுக்கி பேசவும் இல்லை. கிழிக்கவும் இல்லை. தேர்தல் காலத்தில மட்டும் தண்ணீரையும் சோடாவையும் குடிச்சிக்கிட்டு தொண்டை கிழியப் பேசுவாங்க. அதை நம்மட மாடுகள் கேட்டுக்கிட்டு நாரே தக்பீர் அல்லாஹ அக்பர் னு கோசம் போட்டு வாக்குச்சாவடிக்குச் சென்று அவங்க சொல்லுற ஆட்களுக்கு வாக்களிப்பாங்க. பிறகு வீட்டுக்கு வந்து Solapur Bedsheet ஆல போத்திக்கிட்டு தூங்குவாங்க. ஹசரத் -
ReplyDelete1 - இவங்க எங்க எந்தக் காலத்தில ஹசரத் முஸ்லிம்கள்ட உரிமைக்காக குரல் கொடுத்தாங்க. List பண்ணுங்க பார்ப்போம்.
2 - அப்ப இப்ப இருக்கிற மேயரை என்ன செய்றது. வாயைக் கௌப்பாதீங்க. அப்பிடித்தான் கிளப்ப முயற்சித்தால் அதுக்குப் பிறகு வரக்கூடிய விளைவுகளுக்கு நீங்க முகம் கொடுப்பீங்களா.
3 – அப்பிடின்னா 1987ற்குப் பின்னர் கல்முனைக்கு செய்த அபிவிருத்தி வேலைகள் எல்லாத்தையும் புல்டோசர் போட்டு அழிச்சுப்போடுவோமா. இந்த அழிப்பு வேலைக்கு ஹசரத் அவங்க தன்ட வீட்டுக்காசைத் தருவாங்களா.
4 - முட்டாள் மாதிரிப் பேச வேணாம் ஹசரத். சுனாமி வீட்டுத்திட்டமே பாதிப்புற்ற முஸ்லிம்களுக்குத்தான் வந்தது. எங்கட MP மார் இந்தளவு காலமா இந்த விசயத்தில் என்னத்தைப் புடுங்கினாங்க.
5 - கொழும்பில இந்தேப் பெரிய முஸ்லிம்களின்ட நிலத்தை அரசு சுருட்டினிச்சே. அப்ப இவங்க எல்லோரும் சும்மா 110 இஞ்சி TV ல புதினம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கையாலாகத பயல்கள்.
6 - இது மாத்திரம்தான் உருப்படியான விசயம். ஏங்கட MP மாரோ சரி நீங்களோ சரி காட்டமா ஏதாவது பாராளுமன்றத்திலோ இல்லாட்டி பொதுவெளியிலோ சரி இவ்விடயமாக ஏதாவது விளக்கம் கொடுத்து இருக்கீங்களா.
7 - எத்தனை தரம் ஹசரத் இந்த விடயமா மக்கள் குழுக்கள் இவங்களை MEET பண்ணி பேசியிருக்காங்க. எங்கட ஆட்கள் சாமிமார்கிட்ட போய் அவங்கள தாஐh பண்ணியிருந்தாகூட இந்த மஸ்ஐpத் பிரச்சினையை ரொம்ப easy யா முடிஞ்சு இருந்திருககும். படுபாவிப் பயல்கள்.
8 - இப்ப முஸ்லிம் மக்கள்ட தரித்திரமே இந்த நிகழ்ச்சிநிரல்தான். வடக்கையும் கிழக்கையும் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைப் பற்றி இவங்க ஒரு செக்கன் நினைச்சுப் பாத்தாங்களா.
9 - இது நிச்சயமா ஒரு sensitive ஆன விடயம். இதில முழப் பங்களிப்பும் பெருமையும் ரிசாதுக்கு மாத்திரம்தான்.
10 - இது உண்மையா நடந்திருக்க வேண்டிய விடயம். முதல்ல Muslim Parliamentarians Group என்ற ஒரு அமைப்பு இருந்திச்சு. இந்த விடயத்தில அவங்க எல்லாரும் என்னத்தை புடுங்கினாங்க.
முஸ்லிம்களின்ட பிரச்சினையென்டா எல்லா முஸ்லிம் MP மாரும் கலந்து கொள்ளனும். எங்கட விசயத்தில எப்பவாவது ஏதாவது நடந்திருக்கா ஹசரத். ஓவ்வொரு முஸ்லிம் MP க்கும் தங்கட சொந்த வேலையைப் பார்க்கவே நேரம் இல்லை. நான் சும்மா ஒன்னு கேட்கிறேன். இந்த 12 முஸ்லிம் MP மாரும் இப்ப வெளிநாட்டுக்குப் போயிருக்காங்க. வெளிநாட்டுக்கு இந்த Critical time ல போறதுக்கு என்ன அவசியம், அவசரம் இருக்கு. இவங்க யார்க்கிட்ட Permission எடுத்து போயிருக்காங்க. இந்தக் காலத்தில முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியா பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அதுக்கு யார் தலை கொடுப்பாங்க. அரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ அல்லது வேறு ஒரு தொழில் செய்பவரோ வெளியில் போரதென்டால் substitute ஒருவரை வச்சுப் போட்டுத்தான் போவாங்க. இது என்ன ridiculous!
If no changes are done to the existing MMDA, will u take care of the innit widows in our community? MMDA needs to be amended within the framework of Sharia.
ReplyDeleteIthallam nadakkuma
ReplyDelete