ஐ.தே.க. அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக பேரம், உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் - நாமல்
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ள கருத்து தெடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறு பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் எமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்பதற்கு நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்தே, கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி செலவிடப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியான தகவல் தொடர்பில் உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளார்.
இதேவேளை, இது ஆட்சி கவிழ்ப்பு கிடையாது , இது அரசியலமைப்பின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட மாற்றம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
yo peram illanda ethuku ayya parliment delay....neenga mattume ariwaali naangellam mokka...hmmm ithuthaan ulaham ayya
ReplyDelete