உம்றா செல்கிறார், இன்று இஸ்மாயில் - றிசாத்துடன் இணைவாரா..?
தலைமறைவாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் ஓய்வாக இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அழைத்து வந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி இத்தகவலை சிராஸ் மீராசாஹிப் உறுதிப்படுத்தினார்.
சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தாம் இருக்கும் இடத்தினை குறிப்பிட்டார்.
அதன்படி அவரை சந்தித்து பேசியதோடு தலைவர் றிசாட் பதியுதீனையும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினோம்.
எமது கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்காவுக்கு உமராவுக்கு சென்றுள்ளார்கள். இன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலும் உம்ரா செய்வதற்காக மக்கா சென்று தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.
விடிவெள்ளி
இப்படியானவர்கள்தான் முஸ்லிம்காங்கிரஸில் இருந்து தனக்கு எதுவும் கிடைக்கமாட்டிங்கின்றது என்று விரண்டோடி மக்கள்காங்கிரசில் சந்தோசத்துடன் மக்கள் தொண்டர்கள் என்று பெயர்சூட்டி ரிசாதால் கௌவுரவப்படுத்தப்பட்டவர்கள்!
ReplyDeleteகள்ளம் கபடமுள்ள நீங்கள் - நயவஞ்சகத்தனமுள்ள நீங்கள் டுபாய்க்கோ¸ அமெரிக்கவுக்கோ ஏன் இந்தியாவுக்கோ போய்த் தொலையுங்கள். புனித மக்காவையோ¸ உம்றா கடமையையோ வலிந்திழுத்துக் கேவலப்படுத்தாதீர்கள். உங்களுக்கெல்லாம் ஒரு உம்றா - ஒரு புனித பயணம். அல்லாஹ் உங்கள் செயல்களையும் சிந்தனைகளைகளையும் நோட்டமிடுகின்றான் என்பதை மறவாதீர்கள். தண்டனை வந்தால் தப்ப முடியாது. உமக்கும்¸ உம்மைப் போன்று உம்றாவைப் படகாக்கி பாவத்தைப் பரிசுத்தமாகக் காட்ட முனையும் ஏனையவர்களுக்கும் இந்த எச்சரிக்கை.
ReplyDeleteI heard he was rejected by my3.
ReplyDelete