சஜித்தை தலைவராக நியமித்து நாட்டை எழுச்சிப்பாதையில், கொண்டு நடாத்த ரணிலுக்கு வேண்டுகோள்
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான செயலாளர் எஸ்.ஆர். எம். விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் குழப்பநிலையை கருத்தில் கொண்டு நாட்டின் எதிர்கால நலனிற்காகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஜக்கிய தேசிய கட்சியின் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிட்ட கோட்டையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மக்களால் கடந்த தேர்தலில் தோக்கடிக்கப்பட்ட கொள்ளைக்காரர்களான மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியினரிற்கு நாட்டை ஜநாதிபதி ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பொதுமக்களாகிய நீங்கள் அமைதிகாக்க வேண்டாம்.
நாட்டின் ஜனநாயகத்தையும், ஜக்கிய தேசிய கட்யையும் பாதுகாப்பதற்காகவும் ; சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஷவை நியமித்து நாட்டை எழுர்ச்சிப்பாதையில் கொண்டு நடாத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டு எனவும் தெரிவித்தார்.
ஜங்கி கச்சி என்று புதிய ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?
ReplyDeleteபுட்டு கொடுவை எங்கே உள்ளது?
பிரேமதாசாவின் ஆட்சி மஹிந்தவின் ஆட்சியை விட மோசமான ஆட்சியாக இருந்தது. அவரது மகன் எப்படியோ?
ReplyDeleteஆனாலும் ரணில் இடம் கொடுக்கப் போவதில்லை.