Header Ads



ஜனாதிபதி மைத்திரியை, நாறடிக்கும் அல்ஜசீரா

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து பெரும்பான்மை நிரூபிக்க முயற்சித்து வரும் மைத்திரி - மகிந்த அணியினர் குறித்து சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.

இலங்கையின் அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கை குறித்த செய்திகளை வெளியிடாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்தும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக அல்ஜசீரா தொலைக்காட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்ம் கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தை கூட்டாது ராஜபக்சவின் பிரதமர் பதவியை தக்கவைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன இலஞ்சம் கொடுக்கின்றார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், இந்த நிலைமை மேலும் உக்கிரமடையும் எனவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

அதேவேளை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட மேற்குலக நாடுகள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் சர்வதேச தலையீடு அவசியம் என நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்பாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் இந்த நிலைமையை சீர்ப்படுத்த தலையிடுவது முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பதவியை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. Al jaeera mind yourbisiness

    ReplyDelete
  2. பிச்சை எடுக்க அங்கதானே போக வேண்டும்

    ReplyDelete
  3. MR, My3, Alibaba & Co. Will be vanished soon.

    ReplyDelete

Powered by Blogger.