மைத்திரி - பசில் இணக்கம், மொட்டு சின்னத்தில் போட்டியிட சு.க.க்குள் எதிர்ப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தில் எதிர்வரும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து கிடைத்திருக்கும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இவர்கள் கூட்டணி ஒன்றை அமைத்து ஒரே சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் எந்தவிதமான அச்சமின்றி தேர்தலை சந்திக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தாங்கள் ‘மெட்டு’ சின்னத்தில் தேர்தலை சந்திக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment