Header Ads



மனைவிமார்களை மடக்கிப்பிடிக்க முயற்சி - கேவலத்தின் உச்சகட்ட அரசியல்

-Naushad Mohideen-

​பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானவர்களோடு புதிய பிரதமர் தரப்பு நடத்திய பேச்சுக்கள் உரிய பலனை அளிக்கத் தவறிவிட்டன. 

இந்நிலையில் எம்பி மாரின் மனைவிமார் ஊடாக ஆசைகாட்டி பேரம் பேசும் முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. இதனால் குடும்பங்களுக்குள் குழப்ப நிலைகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. 

கோடிக்கணக்கில் தருவதாகவும் பிள்ளைகளுக்கு உள்ளூரில் நல்ல பாடசாலைகளில் அனுமதி ஒக்ஸ்போா்ட் மற்றும் சோபோன் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான வாய்ப்பு என மனைவி மாருக்கு ஆசை ஊட்டப்படுகின்றதாம். தாவி வரும் சிலருக்கு இப்போதைக்கு முற்பணம் ஒரு தொகைதான் வழங்கப்படுகின்றது. 

மீதியை வழங்கப்படும் அமைச்சின் மூலம் தேடிக் கொள்ளுங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்றும் கூறப்படுகின்றதாம். 

கேவலத்தின் உச்ச கட்டத்தில் இலங்கை அரசியல்.

2 comments:

  1. இப்படி ஒரு பிரதமர் நாட்டுக்கு தேவையா? பகிரங்கமாக இலஞ்சம் கொடுத்து வருவதற்கு முயற்சிக்கின்றான் இவன் பிரதமரானால் நாட்டில் அலுவலக அதிகாரிகளின் நிலைமகள் என்ன நாட்டுமக்களின் நிலைமைகள் எவ்வாறு இருக்கும்?

    ReplyDelete
  2. மத்திய வங்கியில் தனது ராயல் கல்லூரி நண்பனை கொள்ளையடிக்க அனுமதித்து மேலதிக வரிகளை நமது தலையில் சுமத்திய ஒருவனும் பிரதமாராக இருந்தாரே?

    ReplyDelete

Powered by Blogger.