சந்திரிகாவை வேட்பாளராக முன்மொழிந்த போதும், மைத்திரியையே தெரிவு செய்தோம் - ரணில்
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னால், வெளிநாடு ஒன்று இருப்பதாக நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில், நேற்றுக்காலை வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“சிறிலங்காவின், அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னால் சில வெளிநாடுகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களின் ஒரு பகுதி மட்டுமே.” என்றும் தெரிவித்தார்.
2015 அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்துமாறு, சில கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முன்மொழிந்த போதும், மைத்திரிபால சிறிசேனவையே தெரிவு செய்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment