இஸ்லாமியர்கள் எங்கேயோ போய்விட்டார்கள், அவர்களின் இடங்கள் இங்கிலாந்தைப் போல இருக்கின்றன
Q: யாரை ஆதரிப்பது என்ற முடிவை கூட்டமைப்பு எடுப்பதற்கு முன்பாகவே நீங்கள் மஹிந்த பக்கம் சாய்ந்தது ஏன்?
2015 செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக வந்ததிலிருந்து 3 ஆண்டுகளாகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த வரவு - செலவுத் திட்டம் ஒவ்வொன்றும் தீர்மானத்திற்கு விடும்போது கைகளை உயர்த்தியிருக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதுகூட, அவரைப் பாதுகாக்க எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருக்கிறது. நாங்கள் அரசியல் தீர்வுக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறோம், ஆதரவு வழங்கியிருக்கிறோம், ரணில் அரசைப் பாதுகாத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்குக் கிடைத்தது என்ன? அரசியல் கைதி விடுவிப்பு, காணி விடுவிப்பு என எத்தனையோ உடனடியாக செய்ய வேண்டிய பிரச்சினைகளில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கிழக்கு தொடர்பாக நான் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் இரண்டுக்கு சாதகமான பதிலைத் தந்தார் ஜனாதிபதி.
ஆகவே, கிழக்கின் அபிவிருத்தியை மையப்படுத்தி, ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு அபிவிருத்தியின் பிரதியமைச்சராக நான் பொறுப்பேற்றிருக்கிறேன். தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலரது செயற்பாடுகள், குறிப்பாக தமிழரசுக் கட்சியில் உள்ள சிலரது செயற்பாடுகளால் பல காலமாகவே மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம்.
தேர்தல் நடக்கும் காலத்திலேயே எங்களை ஆயுதக் குழுக்கள், ஒட்டுக்குழுக்கள் என்றெல்லாம் இவர்கள் விமர்சித்தார்கள். அவர்கள்தான் இப்போது எங்களை துரோகிகள் என்கிறார்கள். உரிமை கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. சகோதர சமூகங்களான இஸ்லாமியர்களும் சிங்களவர்களும் எங்கேயோ போய்விட்டார்கள். அவர்கள் வசிக்கும் இடங்கள் இங்கிலாந்தைப் போலவும் நாங்கள் வசிக்கும் இடங்கள் சோமாலியாவைப் போலவும் இருக்கின்றன. நிலைமை இப்படியே நீடிக்கும் பட்சத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மக்களிடம் போய் நின்றால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள்.
Q: மஹிந்த கடந்த காலங்களில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்தவரல்ல. இப்போது அவரது அமைச்சரவையில் இணைந்து என்ன செய்ய முடியுமென நினைக்கிறீர்கள்?
நான் மஹிந்தவின் அழைப்பின் பேரில் இணையவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில்தான் நான் இணைந்திருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்தபோது, எதுவுமே நடக்கவில்லை, எதையும் செய்யவில்லை என்றீர்களே, இப்போது வந்து இணையுங்கள் என்றார். அதனால், கிழக்கு அபிவிருத்தியை நான் கேட்டுப் பெற்றேன்.
மக்களின் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் எந்தக் கட்சி வேகமாக செயல்படுகிறதோ, அதனோடு இணைந்து நான் பயணிப்பேன். கட்சி நலனுக்காக, தனிப்பட்ட நலனுக்காக நான் செயற்பட்டால் பிறகு வாக்களிக்கவே மக்கள் இருக்கமாட்டார்கள். உரிமையைப் பெற்றுத் தருகிறேன் என்று தொடர்ந்து கூறி, மக்களை ஏமாற்றக்கூடாது. எங்கு போனாலும் மக்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்கிறார்கள். மக்கள் வறுமையில் மதம் மாறுகிறார்கள். அவர்களை துரோகிகள் என்று சொல்லப்போகிறோமா?
Q: உங்களை அடையாளம் கண்டு முன்னிறுத்தியவர் சித்தார்த்தன். அவரைக் கைவிட்டிருக்கிறீர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஆறு கட்சிகள் இருந்தன. இன்றைக்கு வெறும் மூன்று கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. கடைசியாக ஈபிஆர்எல்எஃப்பும் வெளியேறியது. ஏன் வெளியேறினார்கள்? எனக்கு வாய்ப்பளித்ததற்காக சித்தார்த்தனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரிடம் பல முறை பேசியிருக்கிறேன். அபிவிருத்திக்காக ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆகவே அவருக்கு நிலைமை தெரியும். கிழக்கின் நிலை வேறு. யாரும் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சித்தார்த்தன் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரோடு தொடர்ந்து இந்தக் கூட்டுக்குள் இருக்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
கிழக்கில் இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் முன்னேறி விட்டார்கள். தமிழர்களும் அவ்வாறு முன்னேற வேண்டும் என்ற சிந்தனை வரவேற்க தக்கது.
ReplyDeleteஇந்த சிந்தனை மாற்று சமூகங்கள் மீதான பொறாமையாக இல்லாது உங்கள் சமூகத்துக்கு படிப்பினையம் ஆர்வத்தையும் அளிக்கும் என்று நம்பலாமா?
can tell any stories for your own benefit...go ahead
ReplyDeleteஇனக்கலவரம் ஒன்றை உண்டாக்கி நெருப்பு வைக்கலாமே.
ReplyDeleteஇனவாத அரசியலிற்கு பழகி இவனுக்கு முதலமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டது. இத்துப்போன TNA விலிருந்தால் அது நடக்காதென்பதற்காகவும், ராஜபக்சர்களிடம் கிடைக்கப்பெற்ற பெருந்தொகையான பணத்திற்காகவும் பல்டியடித்துவிட்டு இன்று வேறு கதை சொல்கிறான்
ReplyDeleteHe is right
ReplyDeleteஒருபோதும் முஸ்லீம் சமூகம் சகோதர இனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க மாட்டார்கள் .எனவே முஸ்லீம் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடுங்கள் .நிச்சயமாக அவர்கள் சகோதர சமூக முன்னேற்றத்துக்கு உதவி செய்வார்கள்
ReplyDeleteதென்னிலங்கையில் ஞானசார முஸ்லிம்கள் மீது கொண்ட பொறாமையின் காரணமாக ஒரு கலவரத்தை உண்டு பண்ணி தற்போது அதனை அவர் எல்லை மீறி அனுபவிக்கிறார். எங்கள் பொறுமைக்கு கிடைத்த கூலி எனலாம்.
ReplyDeleteமுன்னேறுவதட்கு போட்டி வேண்டும் ஆனால் பொறாமை கூடாது.
குடிப்பழக்கத்தை விட்டு, வட்டிக்குக் கொடுப்பதை விட்டு, மற்றைய தமிழனையும் சகோதரனாய் மதித்து, அவனுக்கு உதவி இன்னும் கடின உழைப்பாளியாய் மாறினால் பிரதியமைச்சரும் அவரது சமூகமும் இங்கிலாந்தைப் போல் இலங்கையில் வாழலாம். அதைவிடுத்து சோனி சோனி என்று இனவாதத்தை மூட்டினால் அது அவர்களை அவர்களே அநியாயப் படுத்திக் கொள்வதே!
ReplyDelete