அலரி மாளிகையில் ரணில், தங்கியிருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை
தேர்தல் ஒன்றை வெற்றி கொள்ள முடியும் என நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை ஏற்றுக் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் இடம்பெறுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ பலவந்தமாக அலரி மாளிகையில் தங்கியிருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடாது கிராமங்களுக்கு சென்று மக்கள் கூறும் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டணியின் கீழ் தேர்தலில் களமிறங்கி 3ல்2 பெரும்பான்மையை பெறுவோம்.
பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தங்கிருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொருத்தமானவர்களுக்கு வழிவிட்டு அரசியலிலிருந்து விலகுவதே ரணில் நாட்டுக்கும், ஜனநாயத்திற்கும் செய்யும் சிறந்த சேவையாக அமையும். எனினும் பதவி மோகம் கொண்ட ரணிலால் அதையெல்லாம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
ReplyDeleteநாடாளுமன்றத்தைக்கூட்டினால் நீங்களெல்லாம் வென்று விடுவீர்கள் என்பதற்காகவா ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக்கலைத்தார்.
ReplyDeleteமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர், அவரின் வாசல்தளத்தில் தங்கியிருப்பதால் சடடப்பிரச்சினை ஒன்றும் எட்படாது.
ReplyDeleteஅவர் பொருத்தமானவர் இல்லையிலா என்பது வேறு விடயம்.