Header Ads



தன்னை தானே ரணில், வீட்டுக் காவலில் வைத்துள்ளார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது இடம்பெயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக்கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவே உலகில் தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக்கொண்டமைக்கான முதல் உதாரணம்.

இவர்கள் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எந்தளவுக்கு நாட்டை சூரையாடியது என்பது தற்போது தெரிகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நிதியமைச்சராக பதவியேற்று சிறிது நேரத்தில் எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது. பெருமளவில் வரிச் சுமையை குறைக்க முடிந்தது. சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் இரத்து செய்யப்பட்டது.

இப்படி மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடிந்த நிலையில், தொடர்ந்தும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்திய அரசாங்கமே ஆட்சியில் இருந்துள்ளது. விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து சென்ற பின்னர் பங்குச்சந்தை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அப்படியானால், விக்ரமசிங்கவிடமே குறை இருந்துள்ளது.

இதன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. விக்ரமசிங்க சென்ற பின்னர், ரூபாயின் பெறுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. 177 ரூபாவாக இருந்த டொலர் தற்போது 175 ரூபாவாக குறைந்துள்ளது. பங்குச் சந்தை வலுவடைந்துள்ளது. வாழ்க்கை செலவு குறைய ஆரம்பித்துள்ளது” எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Poda modaya.ORU WAARUTHULA ELLAM AAHIPOCCHI.MANNAGKATTY.

    ReplyDelete

Powered by Blogger.