மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக, பிரபாகரனையும் விலைபேசுவர் - முஜிபுர் ரஹ்மான்
தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக பிரபாகரனையும் விலைபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்தி மஹிந்த அரசியல் நாடகம் நடத்தி வருகின்றார்.
சர்வாதிகார ஆட்சியினை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காகவும் குடும்ப ஆட்சியில் இருந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவும் 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால் மீண்டும் அவர்கள் விரும்பாத ஆட்சியினை ஜனாதிபதி உருவாக்க நினைப்பாராயின் மக்களின் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
He bought Great Prabaharan in 2010.......
ReplyDeleteமுஸ்லிம் ஐக்கிய முன்னணி என்று தனிக்கட்சி வைத்து தோல்விக்கு மேல் தோல்வி அடைந்த நீங்கள் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய காரணம் பதவி ஆசைதானே? மற்றவர்களுக்கு இருக்காதா?
ReplyDelete2005ல் விலை பேசியவர்கள் தானே..
ReplyDeleteஇவரே கொள்கை மாறி பதவியை பிடித்தவர். இவர் ஆரம்பத்தில் பயங்கர இடதுசாரி, இப்பொழுது மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர்களுக்கு அடிவருடி.
ReplyDeleteAnupavam pesuhiradu
ReplyDelete