ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் ஹரீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாடோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 38 (2)ஆம் சரத்திற்கமைய நாட்டு ஜனாதிபதி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஹரின்,
நான் பார்தேன் ஜனாதிபதி வித்தியாசமாக தான் இருக்கின்றார். ஜனாதிபதி வித்தியசமாக அசைகின்றார். தேசிய கீதத்திற்கு நடனமாடுகின்றார், கைகளை அசைக்கின்றார்.
இவ்வாறான நிலைமையில் உண்மையாக சிந்தித்து பார்த்தால் ஜனாதிபதி மனநிலைமை தொடர்பில் பரிசோதனை ஒன்று மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதனை ஆராய்வதற்கு அரசியலமைப்பில் சட்டம் உள்ளது.
அரசியலமைப்பிற்கமைய, நாட்டு ஜனாதிபதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்படி மனரீதியிலான பாதிப்பு இல்லை என்றால், ஜனாதிபதி ஒருவர் வண்ணத்திப்பூச்சி குறித்து பேசமாட்டார். பேசிய பின்னர் மக்கள் கைத்தட்டி விசில் அடிக்க வேண்டும் என்பதற்காக சற்று நேரம் காத்திருப்பதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.
அரசியலமைப்பின் 38 (2)ஆம் சரத்தில், நாட்டு ஜனாதிபதி ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவரை நீக்க என்ன செய்ய வேண்டும் என தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி முதல் நாடு இயங்கவில்லை. நாடு இயங்குவதனை நிறுத்திவிட்டு சம்பந்தமே இல்லாமல் அமைச்சு பதவிகள் வழங்கப்படுகின்றது. கடிதங்கள் தயாரிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு பைத்தியம் இல்லை என்றால் இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் அதிகாரத்திற்கு கொண்டு வந்த போது இல்லாத பைத்தியம் தற்போது தீவிரமாகியுள்ளது. எல்லோருக்கும் பையத்தியம் ஏற்படும் தான். ஆனால் இருவருக்கு வேகமாக ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் பரிசோதனை செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment