சோனி தொப்பி புரட்டுபவன் என, முஸ்லீம் அரசியல்வாதிகளே நிரூபித்துவிடாதீர்கள்
சோனி தொப்பி புரட்டுபவன். சுயனலக்காரன். நம்பிக்கைத் துரோகம் செய்பவன். பணத்தாசை பிடித்தவன்.துரோகம் என்பது அவனுக்கு கைவந்த கலை என்றெல்லாம் சிங்களப் பெரும்பான்மையினர் இலங்கை முஸ்லீம்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதற்கான மூல காரணம் நீங்கள்தான்.சமுகத்திற்காக நீங்கள் ஒருவரிடமும் விசுவாசமாக இருந்ததில்லை.
இன்று நடந்துகொண்டிருக்கும் அதிகாரப் போட்டியின் இறுதிக்காய் நகர்த்தலில் வெல்லப்போவது மஹிந்தவா ரணிலா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறீலங்கா முஸ்லிம் காங்கிறசிடமும் அகில இலங்கை மக்கள் காங்கிறசிடமும் இறுதியில் வந்திருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னதன் பின்னர் மஹிந்த அணிக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை இலங்கை முஸ்லீம்கள்தான். மஹிந்தவை வெல்லவைப்பதா தோற்க வைப்பதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் இலங்கை முஸ்லீம் அரசியல்வாதிகள்தான். அதாவது முஸ்லீம் காங்கிறசினரும்,மக்கள் காங்கிறசினரும்தான்.தனியே ஒரு கட்சி போனால் ஆதரவு குறையும் என்பதால் இராண்டு கட்சிகளும் யார் முதலில் போவது என்று பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இலங்கையின் பிரஜை என்ற ரீதியிலும், முஸ்லிம் என்ற ரீதியிலும்,கிழக்கைச் சேர்ந்தவன் என்ற ரீதியிலும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிலவரம் இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணானது,மக்களாணைக்கு முரணானது,ஜனனாயகத்திற்கு முரணானது,சட்டவாட்சிக்கு முரணானது.இது உலகறிந்த உண்மை.
ஜூடாசையும், புரூட்டசையும்,எட்டப்பனையும் மிஞ்சிய ஒரு அரசியல் விபச்சாரி மைத்திரிபால சிரிசேன செய்திருக்கும் இந்த ஜனனாயக விரோத,பாசிஸ,சர்வதிகார செயலை முழு உலகும் கண்டித்துக் கொண்டிருக்கிறது.மஹிந்த வென்றால் நான் மண்ணுக்குள் எட்டடி கீழே கிடப்பேன் என்று சொன்ன மைத்திரி தன்னைக் கொத்த வந்த ஒரு நச்சுப்பாம்பிற்கு மடியில் வைத்துப் பால் கொடுக்கிறார்.அது தன்னையும் கடிக்கும் என்று தெரியாத அறிவிலியாகிவிட்டார் அவர்.
பாராளுமன்றத்தை முடக்கிவிட்டு உறுப்பினர்களைப் பேரம் பேசுவது தெட்டத் தெளிவாகிவிட்டது. அமைச்சுப் பதவிக்கும் பணத்திற்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாயாக அலைகிறார்கள் அரசியல்வாதிகள். சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு கேவலமான செயலை மைத்திரியும் மஹிந்தவும் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இது ரணிலா மஹிந்தவா என்ற பிரச்சினை அல்ல.முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் இருவரும் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவர்கள்தான். ஆனால் இப்பொழுதைய பிரச்சினை மஹிந்தவா ரணிலா என்பது அல்லவே அல்ல.இலங்கையின் யாப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு,நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டு பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்கும் பதவி வெறி கொண்ட ஓ நாய்களின் ஊளைச் சத்தத்தை நிறுத்தி ஜனனாயகத்தையும் சட்டத்தையும் நிலை நிறுத்தும் தருணம் இது.
இந்த நாட்டின் யாப்பை மீறி,மக்கள் கொடுத்த ஆணையை வீசி எறிந்துவிட்டு,அதிகாரத்தை விரும்பிய மாதிரிக் கையாள நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.மஹிந்தவை ஆதரிப்பவர்கள் கூட அவர் அதிகாரத்தைப் பெற்ற முறையைத் தவறென்கிறார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ,ஜேவிபியும் கூட இந்த யாப்பு மீறலுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
இது ரணில் மஹிந்த போராட்டம் அல்ல.இது ஜனனாயகத்திற்கும் சர்வதிகாரத்திற்கும் எதிரான போராட்டம்.மஹிந்த பிரதமராக இருந்து ரணில் இப்படிச் செய்திருந்தால் ரணிலை எதிர்த்து மஹிந்தவை ஆதரிக்க வேண்டியிருந்திருக்கும்.ரணில் அரசியலுக்குப் பொருத்தமற்றவர்.அவரை சட்ட ரீதியாகப் பதவி விலக்க வேண்டும்.நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அவரை பதவி விலக்கி விட்டு மஹிந்த பெரும்பான்மை காட்டி ஆட்சிக்கு வந்திருந்தால் அது சரியானது.ரணில் பிழையானவர் என்றால் அவரை சட்ட ரீதியாக விலக்குவதற்கு துணை போங்கள் அது பிரச்சினை அல்ல.யாப்பை மீறி இலங்கையை சர்வதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லும் முனைப்புகளுக்கு துணை போகாதீர்கள்.
இந்த அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராக முழு நாடும் ஒருபக்கமும் மஹிந்த அணியினர் ஒரு பக்கமும் நிற்கிறார்கள்.
முஸ்லீம் அரசியல்வாதிகளாகிய நீங்கள் தப்பித் தவறி மஹிந்தவிடம் போய் ஒட்டிக் கொண்டு அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோற்கடித்து மஹிந்தவை வெற்றி பெற வைப்பீர்களாக இருந்தால் இலங்கை வரலாற்றில் கரி எழுத்துக்களால் எழுதப்படும் துரோகிகளாக இலங்கை முஸ்லீம்கள் அடையாளப்படுத்தப்பட்டுவிடுவார்கள்.இலங்கை முஸ்லீம்களும் அரசியல் யாப்பை மீறுபவர்களோடு உடன்படுபவர்கள் என்று வரலாறு உங்களைப் பழி சொல்லும்.ஐம்பது கோடிக்கு சோரம் போனவன் சோனி என்று எம்மை வரலாறு பழிக்கும்.சோனி தொப்பி புரட்டிதான் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஒவ்வொரு முஸ்லிமும் வெட்கித் தலை குனிய வரும்.
இந்த வரலாற்றுத் துரோகத்தை இழைத்து விடாதீர்கள்.சுயனலத்திற்கப்பால் சரியோடு நில்லுங்கள்.இலங்கை முஸ்லிம்கள் உண்மையின் பக்கம் நின்றார்கள்,இலங்கை யாப்பை மதித்தார்கள் என்று நாம் பெருமைப்படலாம்.
முஸ்லீம் அரசியல்வாதிகளே ஒரு வரலாற்றுத் துரோகத்தின் பங்காளியாகாதீர்கள்.
Raazi Muhammeth Jabir
appo thamilan thoppi poduwana?
ReplyDeletesingalawan thoppi thaippawana ?
all are same
what about thondy
what about suresh
what about viyalendran
what about daouglas
Wrong Title..
ReplyDeleteNot only Muslim Politician,,, It is from Every community.. They (Ministers) are looking for Batter DEALS. But the issue is whether this deal for the sake of
1. Public and society: Then the Minister is to be respected
2. Own post and Pocket: Then the Minister is to be blamed.
So the Title is not specific to Muslims. Stop giving such title any more
100% You’re correct I agree thanks
ReplyDeleteஇப்பொழுது தொப்பி பிரட்டுவதை விட ஜட்டியை மாத்தி போடும் தமிழர்களின் அரசியல் தான் பேசுபொருளாகிவிட்டது
ReplyDeleteMy advice is that we should see reality now - Insha Allah and “ALL MUSLIM MP’S SHOULD SUPPORT HON. MAHINDA RAJAPAKSA IN PARLIAMENT” WHEN PARLIAMENT IS RECONVENED ON NOVEMBER 7TH., 2018, INSHA ALLAH.
ReplyDelete“THE MUSLIM VOICE” is happy that a “PROMINENT MUSLIM LAWYER and a strong supporter of Former Defense Secretary, Gotabaya Rajapaksa (PC- not an MP) is engaged in “brokering a deal” with Hon. Rishad Bathiudeen and Hon. Rauf Hakeem to make this happen, Insha Allah. “The Muslim Voice” appreciates this move. BUT THERE ARE OPEN SIGNS THAT SOME OF THE MP’s OF THE SLMC AND THE ACMC HAVE ALREADY ASSURED HON. PM MAHIND RAJAPAKSA TO SUPPORT HIM ON NOVEMBER 7th, WHEN PARLIAMENT IS RECONVENED, Insha Allah. The desperate Rishad Bathiudeen and Rauf Hakeem (who were elected as UNP nominees of the UNF in 2015 are dead scared that they “DARE” go against Ranil Wickremesinghe at this moment because they may lose UNP Muslim votes at the next general elections, because, THAT IS HOW THEY MAKE THE DEALS WHEN THEY CONTEST ELECTION TO ENABLE KEEP THE NAME OF THEIR PARTIES PRESENT IN PARLIAMENT AND WIN THEIR SEATS.
“The Muslim Voice” is again correct – Alhamdulillah when it informed the Muslim voters (Pamaramakkal) that this is the “political treachery that these “MUNNAFIKK AND DECEPTIVE” Muslim political leaders will“ PLAY” on our community. NEVERTHER LESS, if Mahinda Rajapaksa has to have their support (votes) in parliament on the 7th., November 2018, when parliament is reconvened, so it be, Insha Allah. BUT THE GEGOTIATORS (Muslim Lawyer/PC and Hon. Hisbullah should not LET DOWN those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They should both make sure that they are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. It is these Muslim representatives that the "Mahinda pela",Basil and Gotabaya should “LISTEN” to in the future, ON MUSLIM MATTERS AND AFFAIRS. The Muslim “PAMARAMAKKAL”/voters should begin to work to REMOVE both the leaders from the ACMC and SLMC and bring about changes (DEMOCRACY) to the Muslim parties. This should happen soon, Insha Allah. OTHERWISE A NEW “MUSLIM DEMOCRATIC PEOPLES PARTY” WILL EVOLVE/TAKE SHARE SOON, INSHA ALLAH.
Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice"
சோனி தொப்பி புரட்டியது சீனாக்காரன் குடுமி கொண்டை வைத்திருந்த காலத்தில். இப்போ சீனாக்காரனுக்கு கொண்டையுமில்லை - சோனிக்கு தொப்பியுமில்லை.
ReplyDeleteஇப்போ தொப்பி புரட்டிய ஜனாதிபதியுடன் சேர்ந்து மொத்த பாரளுமன்றமே தொப்பி புரட்டுது. கொஞ்சப் பேர் தொப்பி இல்லாம மொட்டத்தலையையே புரட்டுறானுகள். இன்னும் கொஞ்சப் பேர் தொப்பி கிடைக்காதா என்று அலைகிறானுகள். இதில் சோனிர தொப்பி மட்டும்தான் மற்றவர்களின் கண்ணுக்கு தெரிகின்றதோ????
this is challenge for poltics..but all srilankan should be avoid maithree poltics...
ReplyDeleteசோனி தொப்பி புரட்டுவதைவிட கேவலமான செயல்கள்தான்; ஏனைய அரசியல்வாதிகளும் செய்கின்றார்கள். செய்துள்ளார்கள். அரசியலில் சிறுபான்மையினருக்கு உரிமைகளை வேண்டி நிற்கமுடியாது இந்தக்காலத்தில். மக்களுக்கு ஏதாவது அபிவிருத்திகளை செய்யவே அரசியல் தேவைப்படுகின்றது. யாப்புக்கு முரண், சட்டவிரோதம் என்றெல்லாம் தெரிந்தும் தானே ஏனைய உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர். தற்பொழுது மாரினாலோ மாராவிட்டாலோ அரசியல்வாதிகள் பணத்துக்கு சோரம் போனவர்கள் என்று எமது சமுதாயமே சொல்லித்தான் திரிகின்றது. முன்னைய காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சேவையுமே செய்வதில்லை என்று நம்மில் எத்தனை பேர் குறைகூறி இருக்கின்றோம். இப்பொழுதும் அவ்வாரே அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டால் சிறு காலங்களில் இப்போதைய சூழ்நிழையை மறந்து நாம் எமது அரசியல் வாதிகளை உதவாக்கரை என்று பேசுவோம் என்பது உறுதி.
ReplyDeleteஎன்னைப் பொருத்தமட்டில் மகிந்தவும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துள்ளார். ரணிலும் அதைவிட துரோகம் செய்துள்ளார். இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வருபவர்களும் இதைவிட துரோகம் செய்யத்தான் போகின்றார்கள். அல்லாஹ்தான் எம்மைப் பாதுகாப்பான்.
ரணிலா, மஹிந்தவா என்கின்ற காய் நகர்த்தல் தற்காலிகமானது. முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு இல்லாமலே அடுத்த தேர்தலில் மஹிந்த பெரு வெற்றி பெறப் போவது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. இப்பொழுது அதரவு கொடுத்தால் முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் முஸ்லிம்கள் புறம் தள்ளப் படுவார்கள்.
ReplyDeleteOnly Allah can save Muslims.But we should be honest to be a Muslim. The politician took oath that they should abide by the constituence.So they should remain where they are.Otherwise they can be named hypocrite (munafik).Therefore the Muslim politician behave as Muslim if they want to get reward from Allah.Allah is all knowing. Allah looks at the intention in their mind not the action.If they have this belief they don't need to worry about their selfish intention.May Allah give the politician hidayath. Insha Allah.
ReplyDeleteSRI LANKA MUSLIMS SHOULD FORM A NEW POLITICAL PARTY JOINING THE SLMC SUPPORTERS/VOTERS (PORAALIGAL AND PAMARAMAKKAL) AND SUPPORTERS OF THE ACMC. The NEW POLITICAL PARTY has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future, Insha Allah. “The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".
SRI LANKA MUSLIMS SHOULD FORM A NEW POLITICAL PARTY JOINING THE SLMC SUPPORTERS/VOTERS (PORAALIGAL AND PAMARAMAKKAL) AND SUPPORTERS OF THE ACMC. The NEW POLITICAL PARTY has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future, Insha Allah. “The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".
I second the article's point. Whether Ranil is better or not, just stand with the right side of the political spectrum judged by the constitution. If you support MR, that would really mean you guys have budged for power and it would leave a permanent strain on our community as a whole.
ReplyDeleteTo the ones who argue that Tamil MPs did support MR and why call only Muslim MPs the "Thoppi Puratti", just because someone else does, it won't automatically make the action right, or should you follow it. This article didn't have to mention Tamil MPs actions since it only addresses Muslims.
Please be just when you judge, that it is best for you and the community as a whole.
Dear friends... minorities allways suffered under Ranil and UNP.so Muslim and Tamil parties either support mahinda or absent. Til Ranil no future for UNP or our mother land
ReplyDelete100% Correct.
ReplyDelete