Header Ads



சோபித தேரரின் நினைவு, நிகழ்வுக்கு வரமறுத்த மைத்திரி - வெற்றிடமாக இருந்த அவருக்கான ஆசனம்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரர். அவரது இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அதில் பங்கேற்க மறுத்து விட்டார். இதனால் முன்வரிசையில் அவருக்கான ஆசனம் வெற்றிடமாக இருந்தது.

கடந்த ஆண்டு, சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு அமைப்பாளர்கள், அழைப்பு அனுப்ப மறந்து போயிருந்தனர். எனினும், அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இந்தமுறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.