ஜனாதிபதியை சுமந்திரன், அப்படி பேசியிருக்கக் கூடாது - சித்தார்த்தன்
“ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது இல்லத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியாவில் நேற்று (04) நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார்.
எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்க கூடாது. சரியோ பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி. அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது” என தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதி அருகில் இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் ராணுவம் வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் காணிகளை ஜனாதிபதி மூலம் பெற்றுக்கொண்டு தற்போது எவ்வளவு நன்றி இல்லாமல் இந்த சுமந்திரன் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார் .இவர்களை போன்றவர்களால் தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலம் மேலும் தூரமாகும் வாய்ப்புக்களே அதிகம் .
ReplyDeleteசட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்
ReplyDeleteசுமந்திரன் சும்மா ஷோ காட்டி இருக்கின்றார்.
ReplyDeleteHaleem Aswar
ReplyDeleteயாழ்ப்பாணத்தில் இருந்த காணிகள் யாருடையது. உங்களுடைய அல்லது ஜனாதிபதியின் அப்பா வீட்டு சொத்தா.
ரணிலின் நன்றியுள்ள நாயாக இருந்தவர் தான் என்பதை பெரிய சத்தத்தில் குரைத்ததன் மூலம் வெளிக்காட்டி இருக்கின்றார். தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் சுத்துமாத்து கெட்டிக்காரன்.
ReplyDelete