முஸ்லிம் காங்கிரஸ் - தேசிய சூரா கவுன்சில் கலந்துரையாடல்
தேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் அதன் முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வியாழக்கிழமை (01) முற்பகல் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைபரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற இக்கருத்துப் பரிமாறலில் சூறா கவுன்சிலின் சார்பில் அதன் தலைவருடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் சிலரான ஜாவித் யூசுப், ரிஸா எஹியா, சட்டத்தரணி ரி.கே.அசூர், அஷ;nஷய்க் சியாத் இப்றாகிம் ஆகியோர் பங்குபற்றினர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் உட்பட அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி அனுபவ ரிதியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
எவ்வாறாயினும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக சூறா கவுன்சில் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
Post a Comment