பாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் - தடையுத்தரவு கிடைத்தால் நிறுத்தப்படும் - மகிந்த தேசப்பரிய
தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு செல்லாது எனவும், தடையுத்தரவு கிடைக்கும் தேர்தலுக்கான பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று -11- கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தடையுத்தரவு கிடைக்கும் வரை நாங்கள் பணிகளை செய்வோம். தடையுத்தரவு கிடைத்தும் பணிகளை நிறுத்தி விடுவோம். ஜனாதிபதிக்கே உயர்நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை கோர முடியும்.
நல்லவற்றுக்காக குரல் கொடுப்பேன். 1999ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிறந்தவர்களுக்கு இம்முறை வாக்களிக்க முடியும். இளைஞர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருப்பது குறிதது வருத்தப்படுகிறேன்.
அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமாயின் ஐஸ் கிரீம் விற்க வேண்டும். தற்போது இனிப்பில்லாத ஐஸ் கிரீமை விற்க வேண்டும் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
all are wasting whose money
ReplyDelete