''என் இதயத்தைக், கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன்" யெமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி
யெமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சவூதி அரேபியா தொடர்ந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து யெமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் யெமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 இலட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர்.
5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். யெமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது. அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. யெமனில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் அமல் ஹுசேன் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். சத்துக் குறைபாட்டின் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாய் மரியம் அலி, ''என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது'' என்றார்.
M.I.Abdul Nazar
கடந்த ஆட்சியில் கஷ்டங்கள் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக வாழ்ந்த சுன்னி,ஷீயா மக்கள் ஈரானிய ஆதிக்க ஆட்சி மாற்றுகிறேன் பேர்வழிகளால் சீரழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நிலைமை சவூதியிலும் நடக்க வேண்டுமா? மை டியர் ஈரான் நக்கீஸ்
ReplyDelete