300 மில்லியனுக்கு விலை போகிறார்கள் - காலையில் ரணிலுக்கு ஆதரவு, மாலையில் மஹிந்தவிடம் பதவி
மக்களாட்சியினை உருவாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டு ஆட்சி அமைத்தவர்கள் இன்று நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்கள்.ஜனாதிபதியின் செயற்பாடு 61 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பினையும் புறம் தள்ளியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினை கண்டித்து இன்று மக்கள் விடுதலை முண்ணயினர் நுகேகொடையில் மக்கள் சந்திப்பினை ஆரம்பித்தனர்.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் பொழுது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக குறிப்பிடுகையில்
இன்று கட்சி தாவல்கள் இடம் பெறுகின்றது காலையில் ரணிலுக்கு ஆதரவு என்று குறிப்பிட்டு ஆதரவு சொல்லி செல்கின்றவர்கள் மாலையில் மஹிந்த தலைமையில் முறையற்ற அமைச்சரவையில் பதவி பிரமானம் செய்துக் கொள்கின்றனர்.
ஒரு பிரதிநிதி 300மில்லினை தாண்டி விலைபோயுள்ளார். மக்களின் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் மக்களிக் அபிவிருத்திக்கு மாத்திரம் போதிய நிதி இல்லை என்று கடந்த ஆட்சியில் குறிப்பிட்டவர்கள் இன்று இவ்வாறு செயற்படுகின்றார்கள்.
Financial forecast
ReplyDeleteDue to high demand for parlimentarians, one US dollar expected to fetch RS 200/- on Monday