Header Ads



2 பிரதமர்களுக்கிடையே அதிகாரப்போட்டி - இலங்கையின் எதிர்காலத்திற்கு காத்திருக்கும் ஆபத்து

இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால் இலங்கையில் உருவாகியுள்ள அரசியல்  நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளதுடன் வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என பீடிஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை ருபாவின் பெறுமதி அச்சப்படவைக்கும் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதால் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை மணியும் அடிக்கப்பட்டுள்ளது என பீடிஐ  தெரிவித்துள்ளது

இலங்கையில் உருவாகியுள்ள குழப்பநிலை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது

தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்தால் இரத்தக்களறி ஏற்படலாம் என்ற அரசியல்வாதிகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஹோட்டல் முன்பதிவுகளை இரத்துச்செய்துவருகின்றனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியாகத போதிலும் ஆடம்பர ஹோட்டல்கள் கடந்த 10 நாட்களில் முன்கூட்டிய பதிவுகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகவும் புதிதாக எவரும் முன்பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பியநாடுகளை சேர்ந்த மக்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு திட்டமிடும் நாட்களில் இந்த மோசமான நிலை உருவாகியுள்ளது என கொழும்பு நகர ஹோட்டலொன்றின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து பலர் முன்பதிவுகளை இரத்துச்செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடி காரணமாக எங்கள் குளிர்காலம் பறிபோய்விட்டது என இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஆடம்பர கடற்கரை விடுதியொன்றின் அதிகாரி தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து தங்கள் பிரஜைகள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நீங்கள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் அரசியல் பேரணிகளை தவிர்க்கவேண்டும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது

பொருளாதாரம் பாதிப்பு


இலங்கையின் பொருளாதாரத்தின் மையமாக விளங்குவது சுற்றுலாத்துறை.கடந்த வருடம் சுமார் 2.4 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர், 3.2 மில்லியன் டொலர்களை செலவிட்டனர். இந்த வருடம் இந்த எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து நீடித்தாலும் சரி மகிந்த ராஜபக்ச அவரது இடத்தை நிரப்பினாலும் சரி வெளிநாட்டு நாணயங்களை உழைப்பது முக்கியமானது.

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் 3.8 வீதத்தினால் வளர்ச்சி காணும் அடுத்த வருடம் இந்த வளர்ச்சி 4.1 வீதமாக காணப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி  கணிப்பிட்டிருந்தது.ஆனால் இவை அனைத்தும் தற்போது இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்த ஒக்டோர்பர் 26 ம்திகதி  இலங்கைக்கு புதிய கடனை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கயிருந்தது.நாங்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எங்கள் சகாக்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம் என  சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் உள்ள ராஜபக்ச மக்களை கவர்வதற்காக எரிபொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலையை குறைத்ததுடன் வரிகளையும் குறைத்துள்ளார்.

பெயர் குறிப்பிடவிரும்பாத திறைசேரி அதிகாரிகள் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு  இலங்கையின் இருப்பு நிலையில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இலங்கையின் நிதியமைச்சராகயிருந்த மங்கள சமரவீர அரசியல் நெருக்கடிகள் ஆரம்பித்த முதல் நான்கு நாட்களிலேயே வெளிநாட்டு இலங்கையை விட்டு செல்வது பெருமளவிற்கு நிகழ்ந்துள்ளது என  தெரிவித்தார்.

2 comments:

  1. ஜனாதிபதி எடுத்த முடிவு சரி என்றும் படுது,
    ரணிலுக்கு செய்ய தெரியவில்லை, மஹிந்த பதவிக்கு வந்த முறை சரியில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. They had created an insecurity in the country.Hence,no investor will come. It is a bad precept and no one is sure of his post. When there is a PM, President has no right to appoint a new person without the sanction of Parliament. New appointee too faces this situation. There should be an amendment in the constitution that any Parliamentary appointment should receive Speaker's approval and it should be ratified by Parliament.President should known that Parliament is not a joke and not his pet.

    ReplyDelete

Powered by Blogger.