நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் நிகழ்த்திய 2 உலக சாதனைகள்
துபாயில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று டி20 தொடரில் நியூஸ்லாந்தை தேற்கடித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
தற்போது பாகிஸ்தான் டி20 ஆட்டங்களில் தொடர்ச்சியக 8 ஆட்டங்களில் வென்றுள்ளது மற்றும் சேஸிங்கில் தொடர்ச்சியாக 11-வது முறையாக வென்றுள்ளது இந்த தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நியூஸ்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. காலின் மன்றோவும் கோரே ஆண்டர்சனும் தலா 44 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார். ஷஹீன் ஷா அப்ரிடி அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி இந்த இலக்கை 19.4 ஓவர்களில் அடைந்து வெற்றி கண்டது.
மேலும் பாபர் அஸாம் 40 ரன்கள் எடுத்தார். ஆசிப் அலி 38, முகமது ஹஃபீஸ் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் டி20 தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தை பெற்று தொடர்ச்சியாக 11 தடவை டி20 தொடரை வென்று உலக சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteவாழ்த்துக்கள்