அமெரிக்காவில் 2 சவூதி, சகோதரிகள் படுகொலை
(விடிவெள்ளளி)
அமெரிக்காவில் கல்வி கற்று வந்த சவூதியைச் சேர்ந்த அரேபிய சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை வொஷிங்டனிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பேச்சாளர் மறுத்துள்ளார்.
அதிர்ச்சி ஏற்பட்டமைக்கான எந்தவித அடையாளங்களுமின்றி 22 வயதான ரொட்டானா பரீயா மற்றும் அவரது சகோதரியான 16 வயதான தாலா ஆகிய இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஹுட்சன் ஆற்றங்கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
கறுப்பு நிற முழுமையான ஆடை அணிந்திருந்த இருவரினது கால்களும் கைகளும் பிணைத்துக் கட்டப்படிருந்தன.
அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு தமது குடும்பத்திற்கு வொஷிங்டனிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திலிருந்து தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக உயிரிழந்த சகோதரிகளின் தாயார் அமெரிக்க புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இரு சகோதரிகளும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த பெண்களுக்கு சவூதி திரும்புமாறு உத்தரவிடப்படவில்லை என சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அரசியல் தஞ்சம் கோரியிருந்தத சவூதி அரேபிய சகோதரிகளை அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் சவூதி அரேபியாவுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என பாத்திமா பைசன் கடந்த சனிக்கிழமை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவை காலக் கிரமத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
வேர்ஜீனியாவிலுள்ள தமது குடும்பத்தினரில் இல்லத்திலிருந்து இரு சகோதரிகளும் வெளியேறிவிட்டதாகவும் 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அவர்கள் அங்கு வசித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு என்ன நடந்தது என தீர்மானிக்க முடியாமலிருக்கின்றது. அவர்களது வீட்டிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அதிகமான தொலைவிலுள்ள ஆற்றங்கரைக்கு எவ்வாறு வந்தார்கள் என்பது குழப்பமாக இருப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி தூதரகம் செய்த இன்னொரு கொலையா?
ReplyDelete