Header Ads



புலிகளினால் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 28 வருடங்கள் - யாழ்ப்பாண முஸ்லிம்கள் உலகநாடுகளில நினைவுகூர்ந்தனர்


வட மாகாண முஸ்லிம்கள் புலிகள் அமைப்பினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை நினைவுகூர்ந்து சர்வதேச யாழ் முஸ்லிம் சமூகம் (JMC-I) அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் “எமது தாயகமும் வடக்கே” என்ற தொனிப்பொருளில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது. அதில் வட மாகாண முஸ்லிம்களின் காலந்தாழ்த்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நீடித்த தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், அதனை அமைப்பதில் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அசமந்தப்போக்கே குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் வட மாகாண முஸ்லிம்களின் நீடித்த பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைக் காண்பதற்கு புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், வரவேற்புரை அமைப்பின் செயலாளர் ரம்ழான் மஜீத் அவர்களும் தலைமையுரை அமைப்பின் தலைவர் பஸ்லீம் சுஹூத் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது. சகோதரர் சாஹுல் ஹமீட் ரிஸ்வி அவர்கள் “கருப்பு ஒக்டோபர்” நினைவு உரை ஆற்றினார். “வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அடக்குமுறையும் நாம் செய்ய வேண்டியவையும்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஹைதர் அலி அவர்கள் உரையாற்றினார். உள்நாட்டில் இடம்பெயர்வு காரணமாக வட மாகாண முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தேசியளவில் சம காலத்தில் எதிர்நோக்கும் இனவாத சவால்கள் குறித்து அகில இலங்கை வை.எம்.எம்.எ பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் ஜிப்ரி ஹனீபா அவர்கள் உரையாற்றினார்.“இலங்கை மக்களின் பாதுகாப்பும், இனங்களுக்கிடையிலான சகோதரத்துவமும், சமூகத்திற்கிடையிலான ஒற்றுமையும்” என்ற தலைப்பில்  அவர்கள் உரையாற்றினார். இலங்கை சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் சகோதரர் சஜாத் அவர்கள் உரையாற்றினார்.புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிகளின் கல்வி செயற்பாடுகளும் சவால்களும் என்ற தலைப்பில் சகோதரர் லப்ரீன் உரையாற்றினார். குறித்த நிகழ்வை அமைப்பின் இணைப்பாளர் சகோதரர் ஜவாமில் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

குறித்த நிகழ்வில், இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும், புத்தளம் மாவட்டத்தில், கொழும்பு குப்பைகளை கொட்டும் அரசாங்கத்தின் முடிவு குறித்தும் ஆராயப்பட்டு கண்டனமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில், வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதிலும், சர்வதேசமயப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றிய மர்ஹூம் கலாநிதி ஹஸ்புல்லாஹ் அவர்களை கௌரவப்படுத்தி, நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் குறித்த நிகழ்வுகள் கனடா,அமெரிக்கா,துபாய், ஆஸ்திரேலியா, கட்டார், குவைட், இலங்கை ஆகிய நாடுகளிலும் சர்வதேச யாழ் முஸ்லிம் சமூகம் (JMC-I) அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

-Jmc -I








4 comments:

  1. Everybody were settled with their whole family and live peacefully in north. No point for rememberance

    ReplyDelete
  2. இவங்க வேற எப்ப பார்த்தாலும் இதையே பேசிட்டு

    ReplyDelete
  3. என்ன அனுசான் உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவர்களுக்கு �� சட்னியா?

    ReplyDelete
  4. என்ன அனுசான் உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவர்களுக்கு 🍅சட்னியா?

    ReplyDelete

Powered by Blogger.