200 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு, விசாரிக்காமலேயே நிராகரித்த நீதிமன்றம்
மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
72 க்கும் அதிகமானோரை கொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விக்னேஸ்வரநாதன் பத்திரன், சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகிய மூவரையும், 2002ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டு, 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.
தமக்கு வழங்கப்பட்டுள்ள 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி, இவர்கள் மூவரும், மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழு முன்பாக நேற்று அழைக்கப்பட்டது.
அந்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலேயே, அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
Post a Comment