ஒக்டோபர் 15ஆம் திகதியே, ரணிலின் பதவியை பறிக்க திட்டமிட்ட மைத்திரி
கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணிலின் பிரதமர் பதவியை பறிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சி மாற்றத்தை கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி செயற்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்த போதிலும், இந்த விடயம் குறித்து அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பிரதானியொருவர் அமெரிக்காவிற்கு உளவுத் தகவல் வழங்கியிருந்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம், இந்த ரகசிய தகவல்களை குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் வழங்கியுள்ளார்.
இந்த வியடம் ஜனாதிபதிக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் குறித்த தீர்மானத்தை ஜனாதிபதி காலம் தாழ்த்தியுள்ளார்.
இந்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவர் யார் என்பதனை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலக்கிக் கொள்வது குறித்து சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத் தலைவரும் பங்கேற்றிருந்தார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
Post a Comment