14 ம் திகதி சில, MP கள் கொல்லப்படலாம்
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் விசேட நீதிமன்றங்களை கலைப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்தின் மூலம் இது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்த விசேட நீதிமன்றங்களை கலைப்பதே தனது முதல் நடவடிக்கை என தெரிவித்துள்ளார் என அஜித் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்
இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது புலனாகியுள்ளது எனவும் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.
விசாரணை செய்யப்பட்ட 120 கோப்புகள் குறித்து விசேட நீதிமன்றங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவிருந்தன என குறிப்பிட்டுள்ள அஜித் பெரோ இந்த விசாரணைகளை குழப்புவதே புதிய அரசாங்கத்தை அமைத்ததன் நோக்கம் என்பது அமைச்சரின் அறிக்கை மூலம் புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 14 ம் திகதி ஓரிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படலாம் என தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அஜித்பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனையும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தாவது பெரும்பான்மையை பெற முயல்வது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment