Header Ads



வெள்ளிக்கிழமை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள், சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என, ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தைக் கூட்டும் நாள் பற்றி இன்னமும் தமக்கு தகவல் ஏதும் வழங்கப்படவில்லை என சபாநாயகர் செயலகமும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 5 அல்லது 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்ட போதிலும், இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் சபாநாயகரின் செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எதிர்வரும் ஐந்தாம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாக, ஜனாதிபதி தனக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவுடன், நான்கு கட்சிகளின் தலைவர்கள் நாளை (02) முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்களே நாளை சபாநாயகரைச் சந்திக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. There was a speculation that speaker is going to resign the post which would not be an ideal decision at this juncture, I think UNP,JVP,TNA and Muslim Congress would perhaps urge to the speaker to reconsider his decision due to the prevailing political situation. As visionary gentlemen like Karu Jayasuriya are very important personalities to handle the situation like this. We hope the best for the country.

    ReplyDelete

Powered by Blogger.