பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல் - 3 நீதியரசர்கள் உடனடியாக நியமிப்பு
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நளின் பெரேரா மற்றும் மேலும் இரு நீதியரசர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லையே.
ReplyDeleteநாளை மனுதாக்கல் செய்வதாக ரவூப் ஹக்கீம் நேற்று சொன்னாரே..