கல்முனை RDHS இன் முயற்சியினால் 4 புதிய வாகனங்கள்
இவ்வருடத்திற்கான SHSDP திட்டத்தின் கீழ் கல்முனை சுகாதார பிராந்திய பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினூடாக, பல வருட காலமாக நிலவிய சில குறைபாடுகள் இன்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பிராந்திய தொற்றுநோய் பிரிவுக்காக பிரத்தியேகமான வாகனம் கடந்த பல வருடங்களாக இல்லாமலிருந்ததுடன், உத்தியோகபூர்வமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு பலர் ஒன்றாக செல்வதற்கென பேரூந்து வாகனமும் இல்லாதிருந்தது. அத்தோடு, சில சுகாதார வைத்திய அதிகாரிகளினால் பயன்படுத்தப்படும் வாகனங்கள மிகவும் பழமைவாய்ந்தனவாகவும் இருக்கின்றன. அவற்றில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அடங்கும்.
இதனைக் கருத்திற்கொண்டும், பிராந்தியத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. எல். அலாவுதீன் அவர்கள் எடுத்துக்கொண்ட உயரிய முயற்சியின் காரணமாக நான்கு புதிய வாகனங்கள் சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் வழங்கப்பட்டிருந்தது.
அவற்றை உரிய பிரிவினருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17.10.2018) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. இவ்வாறு அடுத்த வருடமும் ஏனைய பிரிவினரின் வாகனப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிடும் என்று பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. எல. அலாவுதீன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
Post a Comment