றிசாத்தின் அமைச்சு பதவியைக்கேட்ட, தமிழ் கட்சி Mp - மறுத்தார் மகிந்த
(இன்றைய விசேட செய்தி)
* ஜனாதிபதி - சபாநாயகர் இன்று சந்திக்கும் வாய்ப்பு... ஆனால் நாடாளுமன்றம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கூடாது.. அன்று கூடும்போது ஜனாதிபதியின் அக்கிராசன உரை மட்டுமே இடம்பெறும்.
* நிதியமைச்சில் இன்று காலை கடமைகளை பொறுப்பேற்கிறார் பிரதமர் மஹிந்த..புதிய பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் மும்முரம்.
* அவசரமாக நாளை கூடுகிறது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ..
* பிரதமருக்குரிய சிறப்புரிமைகளை மஹிந்தவுக்கு வழங்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் சபாநாயகரிடம் கோரிக்கை. சபாநாயகரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை...
* பொலிஸ் மா அதிபர் பதவி விலக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புக்கள் அழுத்தம்.. புதிய பொலிஸ் மா அதிபர் விரைவில் பதவியேற்பு...
* தமிழ்க்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் மஹிந்தவுடன் இணைய இரகசிய பேச்சு..வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பதவியை கேட்டார்.. ஆனால் மஹிந்த தரப்பு நிராகரிப்பு.. இராஜாங்க அமைச்சர் பதவி தர இணக்கம்... ஆனால் அதனை வேண்டாம் என்று நிராகரித்தார் ..
* ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களை இணைத்து புதிய அணியொன்றை உருவாக்க ரணில் பேச்சு...கட்சிக்குள் எழுந்துள்ள தலைமை பதவி பிரச்சினைகளை தீர்க்கவும் ரணில் வியூகம்...
Ramasamy Sivarajah
MMMmmm They can use this time period to erase all the files, even if they will lose in parliament... they will be still successful as they could have done enough work to protect their files from the courts.
ReplyDelete