மைத்திரியின் அரசில் மகிந்த பிரதமரானால், உயிரை மாய்ப்பேன் என்ற Mpயின் பரிதாபநிலை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தில் இணைய மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்யும் வரையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதல் வரிசை தலைவர்கள் கூட அறிந்திருக்கவில்லை என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார் என்றால், அதனை மேற்கொள்ள ஏன் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் எந்த தேசிய தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்பது ஒப்புவித்து காட்டப்பட்ட நிலைமையில், ஜனாதிபதி தலைமையின் கீழ் உள்ள அரசாங்கத்தில் இணைந்து கொண்டமையானது ஜனாதிபதியிடம் அடிப்பணிந்து போகும் கீழ் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை போல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை உருவாக்கவும் கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர்கள் என்ற வகையிலும் முக்கிய பங்காற்றியவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில், ஊடகங்களிடம் மட்டுமல்ல, கட்சியினரை கூட நேரடியாக சந்திக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் ஊடக சந்திப்பொன்றில், பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா,
“ஜனாதிபதி சிறிசேன இருக்கும் அரசாங்கம் ஒன்றில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றால், தான் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இருக்கும் மாமரத்தில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன்” எனக் கூறியிருந்தார்.
மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் மகிந்த பிரதமராக பொறுபேற்க மாட்டார் என பசில் ராஜபக்ச வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே ரஞ்சித் சொய்சா இந்த கருத்தை வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் தொலைபேசியில் பேசுவோர் “ரஞ்சித் கயிறு வேண்டும் என்றால் கேள்” என கூறி கேலி செய்வதாக பேசப்படுகிறது.
இதனால், தான் கட்டியெழுப்பிய அரசியல் நிலைப்பாடு இறுதியில் கேலிக்குரியதாக மாறியுள்ளமை தொடர்பில் ரஞ்சித் சொய்சா மிகவும் வெறுப்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையில், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
athu appo ithu ippo...ithuthaan poltics
ReplyDelete