ஆனந்த அலுத்கமகே Mp, மகிந்தவின் பக்கம் பல்டியடித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே சற்று முன்னர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சவேயாகும். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு ஒரு மாதத்திலேயே அவரது இயலாமை வெளிப்பட்டுவிட்டது.ரணில் விக்ரமசிங்கவிடம் சாதாரண மக்களின் பிரச்சினைகளை பேச முடியாது.
எங்களது கருத்துக்களுக்கு அவர் செவிசாய்ப்பதில்லை.நாடு தற்பொழுது சரியான பாதையில் நகரும் என ஆனந்த அலுத்கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.
Post a Comment