Header Ads



ஒரு மில்லியன் கார்களை, திரும்பப்பெற BMW முடிவு

சில கோளாறுகள் காரணமாக சர்வதேச அளவில் 1 மில்லியன் கார்களை திரும்ப பெற பி.எம்.டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில், ஆடம்பர சொகுசு கார்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமானது பிஎம்டபிள்யூ நிறுவனம். ஜெர்மன் நாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் விற்பனை சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. ஆடம்பர கார் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக திகழும் பிஎம்.டபிள்யூ, சந்தை செய்யப்பட்ட கார்களில் சில கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால், சுமார் 1 மில்லியன் (10 இலட்சம்) கார்களை  திரும்ப பெற உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  

வெளியேற்றுதல் கேஸ் சர்குலேஷன் கூலர் என்று கூறப்படும் அமைப்பில் இரசாயான கலவையான கிளைகோல் கூலிங் திரவம்  கசிய வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானால் கார்கள் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக கூறி, கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கார்களை  பரிசோதிப்பதற்காக,  பாதிப்புக்குள்ளாகியுள்ள கார் உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பிரச்சினைக்குள்ளாகியுள்ள பாகங்கள் பரிசோதிக்கப்பட்டு, கோளாறு இருப்பின், அந்த பாகம் மாற்றி கொடுக்கப்படும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 48 ஆயிரம் கார்களை இதே பிரச்சினைக்காக திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்தது. அதேபோல், தென்கொரியாவில் நடப்பாண்டு 30 கார்கள் தீ பிடித்ததற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் மன்னிப்புகோரியது நினைவிருக்கலாம். 

No comments

Powered by Blogger.