றோ உளவு அமைப்பை, புகழ்ந்து தள்ளுகிறார் பொன்சேகா
உலகில் உயர்ந்த ஒழுக்கவியல் பண்புகளுடன் செயற்பட்டு வரும் ஒர் அமைப்பே இந்தியாவின் உளவுப் பிரிவான “ரோ” எனவும், அது இன்னுமொரு நாட்டின் அரசியல் தலைவர்களை கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டாது எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
களனிப் பிரதேசத்தில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
எம்முடைய சில உளவுப் படைகள் மோசமான பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெள்ளை வேன் கடத்தல், கப்பம் என பல தரப்பட்ட செயல்களிலும் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.
இவருக்கு பென்சன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டால் இன்னும் கொஞ்சம் காலமேனும் அரசாங்கத்துக்கு இழுத்தடிக்கு வாய்ப்புண்டு. இந்த கேஸுடன் தொடர்ந்தால் தற்போதைய அரசுக்கு மண்கவ்வல்தான்.
ReplyDeleteMr.Minister Where are you from?? Do you know that RAW was helped CIA on former PM of India Rajev Gandhi Murder issue?? You all simply blame Ltte but behind the seen CIA+RAW joint venture but later its was public secret!.
ReplyDeleteRaw, CIA ஆகியவற்றின் சேவை இலங்கைக்கு தேவை
ReplyDeleteரணில் சொல்லிக்கொடுத்ததை அப்படியே சொல்லியிருக்கிறார். Raw இங்கு நிலைக்க துடிப்பது எதிர்காலத்தில் தமிழ் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்
ReplyDelete