Header Ads



ஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து


செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செளதி அரசர் சல்மானுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசோஜிக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என செளதி அரசர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உடனடியாக செளதி அரேபியா செல்லவுள்ளார்.

செளதி தூதரகத்தின் உள்ளே முதல்முறையாக துருக்கி போலீசார் சென்றுள்ளனர். இங்குதான் கடைசியாக கசோஜி பார்க்கப்பட்டுள்ளார்.

இந்த கட்டடத்தில் செளதி அதிகாரிகள் முதலில் நுழைந்தனர். பின்னர் துருக்கி போலீசாரும் அவர்களை பின்தொடர்ந்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தூதரகத்தில் ஜமால் கசோஜி செளதியை சேர்ந்த நபர்களால் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால், இதனை செளதி அரேபியா மிகவும் கடுமையாக மறுத்துள்ளது.

முன்னதாக, செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

"அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்," என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.

"ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

3 comments:

  1. We do not say but millions of people.in Saudi say that they need freedom and reforms ..
    So what ; it they want;
    This killing is crime ..
    Islam means peace; in the name of Islam to kill is not acceptable st all;
    They must remove flog of kalima and put the flog of something else

    ReplyDelete
  2. கொலைகார பாவி உனக்கு இந்த உலகத்திலும் சாபம் உண்டாகுக மறு உலகத்திலும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக.கொலை செய்து என்ன ஆட்சி செய்ய வேண்டும் உனக்கு.

    ReplyDelete
  3. He is a shame for Islam and Muslims

    ReplyDelete

Powered by Blogger.