இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு, நீதிமன்றின் உத்தரவு இதோ
ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று -30- கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, கொழும்பு-03 கொள்ளுப்பிட்டிய பகுதியில் இன்று (30) முன்னெடுக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே மேற்கண்டவாறு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது.
மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் ஆகியன இந்த இடைக்கால தடையுத்தரவின் கீழ் தடைச்செய்யப்பட்டுள்ளது.
கறுவாத்தோட்டப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கொழும்பு மேலதிக நீதவானினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment