Header Ads



மகிழ்ச்சியில் ரணில் - சர்வதேசம் வழங்கிய உறுதிமொழி

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.

இதன்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பாக வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் ரணிலுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் இந்தியா பிரதி உயர்ஸ்தானிகர், அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஜப்பான், அமெரிக்கா, கனடா மற்றும் தென்னாபிரிக்கா தூதுவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மிகவும் ஜனநாயகமான மற்றும் சமாதானமான சூழல் ஒன்று நாட்டினுள் உருவாக்கியதாகவும், அதற்கமைய GSP+ போன்ற நிவாரணங்களும் மீண்டும் நாட்டிற்கு கிடைத்ததாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சர்வதேச வரவேற்பும் சமகாலத்தில் நாட்டிற்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு 19ஆம் திருத்தச்சட்டத்திற்கு முன்னர் பிரதமரை நீக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர் அவ்வாறான அதிகாரம் ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்திருந்தால், அதற்கு எதிராக தாம் செயற்படுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.

தொங்கு நாடாளுமன்றத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேசம் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை புதிய பிரதமருக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறுபான்மை கட்சிகள் பல நேரடி ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Trust MR but not MY3 at any cost any more

    ReplyDelete
  2. Don't say former president. Rain is still the PM of the country

    ReplyDelete

Powered by Blogger.